Back to Languages

Tamil - Chapter 24 - An-Nur

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 62 — Surah An-Nur 24:62

நிச்சயமாக உண்மையான நம்பிக்கையாளர்கள் மெய்யாகவே யாரென்றால், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள்தான். அவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆலோசனை செய்ய அவ(னுடைய தூத)ரிடம் கூடியிருந்தால், அவருடைய அனுமதியின்றி (கூட்டத்திலிருந்து) அவர்கள் விலகிப் போகவே மாட்டார்கள். (அவ்வாறு போகவேண்டிய அவசியம் ஏற்பட்டால், நபியே!) நிச்சயமாக எவர்கள் உம்மிடம் அனுமதியைக்கோரி செல்கிறார்களோ அவர்கள்தான் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாக நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே, அவர்கள் தங்கள் அவசர வேலை ஒன்றுக்காக உம்மிடம் அனுமதி கோரினால், அவர்களில் நீர் விரும்பியவர்களுக்கு அனுமதி அளிப்பீராக. அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்