Back to Languages

Tamil - Chapter 6 - Al-Anam

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 100 — Surah Al-Anam 6:100

(இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் ஜின்களில் பலரை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். எனினும், அந்த ஜின்களையும் அவனே படைத்திருக்கிறான். இவர்கள் (தங்கள்) அறிவீனத்தால் அல்லாஹ்வுக்கு ஆண், பெண் சந்ததிகளையும் கற்பிக்கின்றனர். அவனோ, இவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பவற்றில் இருந்து மிக்க பரிசுத்தமானவனாகவும் உயர்ந்தவனாகவும் இருக்கிறான்