Back to Languages

Tamil - Chapter 7 - Al-Araf

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 127 — Surah Al-Araf 7:127

அதற்கு ஃபிர்அவ்னுடைய மக்களிலுள்ள தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘மூஸாவும் அவருடைய மக்களும் பூமியில் விஷமம் செய்து உன்னையும், உனது தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீ அவர்களை விட்டு வைப்பாயா?'' என்று கேட்டார்கள். அதற்கவன் (அல்ல!) அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிவிட்டு (அவர்களை இழிவுபடுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழவிடுவோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் வகித்திருக்கிறோம். (ஆகவே, நாம் விரும்பியவாறெல்லாம் செய்யலாம்)'' என்று கூறினான்