Back to Languages

Tamil - Chapter 7 - Al-Araf

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 74 — Surah Al-Araf 7:74

‘ஆத்' (என்னும்) மக்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் உங்களைக் குடியேறச்செய்து (அதற்கு) உங்களை அதிபதிகளாக்கி வைத்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் அதன் சமவெளியில் மாளிகைகளையும், மலைகளைக் குடைந்து வீடுகளையும் அமைத்துக் கொள்கிறீர்கள். ஆகவே, அல்லாஹ்வின் இவ்வருட் கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள். மேலும், பூமியில் கடுமையாக விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்'' (என்றும் கூறினார்)