Back to Languages

Tamil - Chapter 82 - Al-Infitar

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 1 — Surah Al-Infitar 82:1

(உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால்

Verse 2 — Surah Al-Infitar 82:2

நட்சத்திரங்கள் சிதறிவிட்டால்

Verse 3 — Surah Al-Infitar 82:3

கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால்

Verse 4 — Surah Al-Infitar 82:4

சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து)

Verse 5 — Surah Al-Infitar 82:5

ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவற்றையும் நன்கறிந்துகொள்ளும்

Verse 6 — Surah Al-Infitar 82:6

மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது

Verse 7 — Surah Al-Infitar 82:7

அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னைப் படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான்

Verse 8 — Surah Al-Infitar 82:8

அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன் அவயங்களைப் பொறுத்தினான்

Verse 9 — Surah Al-Infitar 82:9

எனினும், (மனிதர்களே!) நீங்கள் கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகிறீர்கள்

Verse 10 — Surah Al-Infitar 82:10

நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்

Verse 11 — Surah Al-Infitar 82:11

அவர்கள் (வானவர்களில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்

Verse 12 — Surah Al-Infitar 82:12

நீங்கள் செய்பவற்றையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்

Verse 13 — Surah Al-Infitar 82:13

ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள்

Verse 14 — Surah Al-Infitar 82:14

நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்

Verse 15 — Surah Al-Infitar 82:15

கூலி கொடுக்கும் நாளில் அதையே அவர்கள் அடைவார்கள்

Verse 16 — Surah Al-Infitar 82:16

அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது

Verse 17 — Surah Al-Infitar 82:17

(நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீர் அறிவீரா

Verse 18 — Surah Al-Infitar 82:18

பிறகு, கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உமக்கு எவரேனும் அறிவித்தனரா

Verse 19 — Surah Al-Infitar 82:19

அந்நாளில் ஓர் ஆத்மா, மற்றோர் ஆத்மாவுக்கு ஒரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும்