Back to Languages

Tamil - Chapter 92 - Al-Layl

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 1 — Surah Al-Layl 92:1

(அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக

Verse 2 — Surah Al-Layl 92:2

பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக

Verse 3 — Surah Al-Layl 92:3

ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக

Verse 4 — Surah Al-Layl 92:4

(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன

Verse 5 — Surah Al-Layl 92:5

ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து

Verse 6 — Surah Al-Layl 92:6

(இந்த மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கிறாரோ

Verse 7 — Surah Al-Layl 92:7

அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் எளிதாக்கித் தருவோம்

Verse 8 — Surah Al-Layl 92:8

எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது

Verse 9 — Surah Al-Layl 92:9

(இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கிறானோ

Verse 10 — Surah Al-Layl 92:10

அவனுக்குக் (கஷ்டத்திற்குரிய) நரகப் பாதையைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்

Verse 11 — Surah Al-Layl 92:11

அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால், அவனுடைய பொருள் அவனுக்கு (ஒரு) பயனுமளிக்காது

Verse 12 — Surah Al-Layl 92:12

நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பது நம்மீதுதான் கடமையாகும்

Verse 13 — Surah Al-Layl 92:13

நிச்சயமாக இம்மையும், மறுமையும் நமக்கே சொந்தமானவை

Verse 14 — Surah Al-Layl 92:14

(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்

Verse 15 — Surah Al-Layl 92:15

மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான்

Verse 16 — Surah Al-Layl 92:16

அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான்

Verse 17 — Surah Al-Layl 92:17

இறையச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்

Verse 18 — Surah Al-Layl 92:18

அவர் (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன் பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்

Verse 19 — Surah Al-Layl 92:19

தான் பதில் நன்மை செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் தன் மீது இருக்காது

Verse 20 — Surah Al-Layl 92:20

இருப்பினும், மிக்க மேலான தன் இறைவனின் திருமுகத்தை விரும்பியே தவிர (வேறு எதற்காகவும் தானம் செய்ய மாட்டார்)

Verse 21 — Surah Al-Layl 92:21

(இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார்