Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 99 - Az-Zalzalah
Translation by Abdulhameed Baqavi — Permalink
Verse 1 — Surah Az-Zalzalah 99:1
(பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது
Verse 2 — Surah Az-Zalzalah 99:2
அது, தான் சுமந்திருப்பவற்றை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில்
Verse 3 — Surah Az-Zalzalah 99:3
மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்
Verse 4 — Surah Az-Zalzalah 99:4
அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும்
Verse 5 — Surah Az-Zalzalah 99:5
(இவ்வாறே) உமது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்
Verse 6 — Surah Az-Zalzalah 99:6
அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்
Verse 7 — Surah Az-Zalzalah 99:7
ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார்
Verse 8 — Surah Az-Zalzalah 99:8
(அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்