Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 75 - Al-Qiyamah
Translation by Jan Turst Foundation — Permalink
Verse 1 — Surah Al-Qiyamah 75:1
கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்
Verse 2 — Surah Al-Qiyamah 75:2
நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்
Verse 3 — Surah Al-Qiyamah 75:3
(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா
Verse 4 — Surah Al-Qiyamah 75:4
அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்
Verse 5 — Surah Al-Qiyamah 75:5
எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்
Verse 6 — Surah Al-Qiyamah 75:6
கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்
Verse 7 — Surah Al-Qiyamah 75:7
ஆகவே, பார்வையும் மழுங்கி
Verse 8 — Surah Al-Qiyamah 75:8
சந்திரன் ஒளியும் மங்கி
Verse 9 — Surah Al-Qiyamah 75:9
சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்
Verse 10 — Surah Al-Qiyamah 75:10
அந்நாளில் "(தப்பித்துக் கெள; ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்
Verse 11 — Surah Al-Qiyamah 75:11
இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்)
Verse 12 — Surah Al-Qiyamah 75:12
அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு
Verse 13 — Surah Al-Qiyamah 75:13
அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்
Verse 14 — Surah Al-Qiyamah 75:14
எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான்
Verse 15 — Surah Al-Qiyamah 75:15
அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்
Verse 16 — Surah Al-Qiyamah 75:16
(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்
Verse 17 — Surah Al-Qiyamah 75:17
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன
Verse 18 — Surah Al-Qiyamah 75:18
எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்
Verse 19 — Surah Al-Qiyamah 75:19
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது
Verse 20 — Surah Al-Qiyamah 75:20
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்
Verse 21 — Surah Al-Qiyamah 75:21
ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்
Verse 22 — Surah Al-Qiyamah 75:22
அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்
Verse 23 — Surah Al-Qiyamah 75:23
தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்
Verse 24 — Surah Al-Qiyamah 75:24
ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்
Verse 25 — Surah Al-Qiyamah 75:25
இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்
Verse 26 — Surah Al-Qiyamah 75:26
அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்
Verse 27 — Surah Al-Qiyamah 75:27
மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது
Verse 28 — Surah Al-Qiyamah 75:28
ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்
Verse 29 — Surah Al-Qiyamah 75:29
இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்
Verse 30 — Surah Al-Qiyamah 75:30
உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது
Verse 31 — Surah Al-Qiyamah 75:31
ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை
Verse 32 — Surah Al-Qiyamah 75:32
ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்
Verse 33 — Surah Al-Qiyamah 75:33
பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்
Verse 34 — Surah Al-Qiyamah 75:34
கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்
Verse 35 — Surah Al-Qiyamah 75:35
பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்
Verse 36 — Surah Al-Qiyamah 75:36
வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா
Verse 37 — Surah Al-Qiyamah 75:37
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா
Verse 38 — Surah Al-Qiyamah 75:38
பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்
Verse 39 — Surah Al-Qiyamah 75:39
பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்
Verse 40 — Surah Al-Qiyamah 75:40
(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா