Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 90 - Al-Balad
Translation by Jan Turst Foundation — Permalink
Verse 1 — Surah Al-Balad 90:1
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்
Verse 2 — Surah Al-Balad 90:2
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்
Verse 3 — Surah Al-Balad 90:3
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக
Verse 4 — Surah Al-Balad 90:4
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்
Verse 5 — Surah Al-Balad 90:5
ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா
Verse 6 — Surah Al-Balad 90:6
ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்
Verse 7 — Surah Al-Balad 90:7
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா
Verse 8 — Surah Al-Balad 90:8
அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா
Verse 9 — Surah Al-Balad 90:9
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)
Verse 10 — Surah Al-Balad 90:10
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்
Verse 11 — Surah Al-Balad 90:11
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை
Verse 12 — Surah Al-Balad 90:12
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்
Verse 13 — Surah Al-Balad 90:13
(அது) ஓர் அடிமையை விடுவித்தல்
Verse 14 — Surah Al-Balad 90:14
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்
Verse 15 — Surah Al-Balad 90:15
உறவினனான ஓர் அநாதைக்கோ
Verse 16 — Surah Al-Balad 90:16
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்)
Verse 17 — Surah Al-Balad 90:17
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்
Verse 18 — Surah Al-Balad 90:18
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்
Verse 19 — Surah Al-Balad 90:19
ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்
Verse 20 — Surah Al-Balad 90:20
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது