Back to Languages

Tamil - Chapter 1 - Al-Fatiha

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 1 — Surah Al-Fatiha 1:1

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)

Verse 2 — Surah Al-Fatiha 1:2

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன்

Verse 3 — Surah Al-Fatiha 1:3

(அவன்தான்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்

Verse 4 — Surah Al-Fatiha 1:4

தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே)

Verse 5 — Surah Al-Fatiha 1:5

(அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்

Verse 6 — Surah Al-Fatiha 1:6

நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக

Verse 7 — Surah Al-Fatiha 1:7

(அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி.(உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல