Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 102 - At-Takathur
Translation by Abdulhameed Baqavi — Permalink
Verse 1 — Surah At-Takathur 102:1
நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது)
Verse 2 — Surah At-Takathur 102:2
நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது)
Verse 3 — Surah At-Takathur 102:3
நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்
Verse 4 — Surah At-Takathur 102:4
பின்னர், நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவற்றின் பலன்களையும்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்
Verse 5 — Surah At-Takathur 102:5
நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற உறுதியாக நீங்கள் அறிவீர்களாயின்
Verse 6 — Surah At-Takathur 102:6
நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண்முன்) காண்பீர்கள்
Verse 7 — Surah At-Takathur 102:7
பிறகு, சந்தேகமற மெய்யாகவே அதை நீங்கள் உங்கள் கண்களால் கண்டுகொள்வீர்கள்
Verse 8 — Surah At-Takathur 102:8
(உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்