Back to Languages

Tamil - Chapter 104 - Al-Humazah

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 1 — Surah Al-Humazah 104:1

குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான்

Verse 2 — Surah Al-Humazah 104:2

பொருளைச் சேகரித்து (நல்ல வழியில் செலவு செய்யாது) அதை எண்ணிக்கொண்டே இருப்பவன்

Verse 3 — Surah Al-Humazah 104:3

தன் செல்வம் தன்னை என்றென்றுமே (உலகத்தில்) நிலைத்திருக்கச் செய்யுமென்றும் எண்ணிக் கொண்டான்

Verse 4 — Surah Al-Humazah 104:4

அவ்வாறல்ல! (நிச்சயமாக அவன் மரணிப்பான். பின்னர்) நிச்சயமாக அவன் ‘ஹுதமா' என்னும் நரகத்தில் எறியப்படுவான்

Verse 5 — Surah Al-Humazah 104:5

(நபியே!) ‘ஹுதமா' (என்றால்) என்னவென்று நீர் அறிவீரா

Verse 6 — Surah Al-Humazah 104:6

(அதுதான்) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பு

Verse 7 — Surah Al-Humazah 104:7

(அது உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் பாய்ந்துவிடும்

Verse 8 — Surah Al-Humazah 104:8

(நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்

Verse 9 — Surah Al-Humazah 104:9

(நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்