Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiBengaliFrench
Tamil - Chapter 107 - Al-Maun
Translation by Abdulhameed Baqavi — Permalink
Verse 1 — Surah Al-Maun 107:1
(நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா
Verse 2 — Surah Al-Maun 107:2
(ஆதரவற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்
Verse 3 — Surah Al-Maun 107:3
அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை
Verse 4 — Surah Al-Maun 107:4
(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்
Verse 5 — Surah Al-Maun 107:5
அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்
Verse 6 — Surah Al-Maun 107:6
(மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்
Verse 7 — Surah Al-Maun 107:7
(மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்