Back to Languages

Tamil - Chapter 55 - Ar-Rahman

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 1 — Surah Ar-Rahman 55:1

(நபியே! அல்லாஹ்தான்) அளவற்ற அருளாளன்

Verse 2 — Surah Ar-Rahman 55:2

(அவன்தான்) இந்த குர்ஆனை (உங்களுக்குக்) கற்றுக் கொடுத்தான்

Verse 3 — Surah Ar-Rahman 55:3

அவனே மனிதனைப் படைத்தான்

Verse 4 — Surah Ar-Rahman 55:4

அவனே மனிதனுக்குப் பேசவும் கற்பித்தான்

Verse 5 — Surah Ar-Rahman 55:5

சூரியனும் சந்திரனும் (அவற்றுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே (செல்கின்றன)

Verse 6 — Surah Ar-Rahman 55:6

செடிகள், (கொடிகள்,) மரங்கள் (ஆகிய அனைத்தும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டுச்) சிரம் பணிகின்றன

Verse 7 — Surah Ar-Rahman 55:7

அவனே வானத்தை உயர்த்தினான். மேலும் (உங்கள் வியாபாரத்திற்காக) தராசை அமைத்தான். ஆகவே, நீங்கள் நிறுவையில் அநியாயம் செய்யாதீர்கள்

Verse 8 — Surah Ar-Rahman 55:8

அவனே வானத்தை உயர்த்தினான். மேலும் (உங்கள் வியாபாரத்திற்காக) தராசை அமைத்தான். ஆகவே, நீங்கள் நிறுவையில் அநியாயம் செய்யாதீர்கள்

Verse 9 — Surah Ar-Rahman 55:9

ஆகவே, நீங்கள் நீதமாக நிறுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்

Verse 10 — Surah Ar-Rahman 55:10

படைப்புகள் வசித்திருக்க வசதியாகப் பூமியை அமைத்தான்

Verse 11 — Surah Ar-Rahman 55:11

அதில் (பலவகை) கனிவர்க்கங்களும் (குலைகள் நிறைந்த) பாளைகளை உடைய பேரீச்சை மரங்களும் உற்பத்தியாகின்றன

Verse 12 — Surah Ar-Rahman 55:12

உமியால் மூடப்பட்ட தானியங்களும், வாசனைப் புற்பூண்டுகளும் உண்டாகின்றன

Verse 13 — Surah Ar-Rahman 55:13

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 14 — Surah Ar-Rahman 55:14

சுட்ட பாத்திரத்தைப் போல் (அதை தட்டும்போது ‘கன் கன்' என்று) சப்தமிடும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான்

Verse 15 — Surah Ar-Rahman 55:15

நெருப்பின் கொழுந்தினால் அவன் ஜின்னைப் படைத்தான்

Verse 16 — Surah Ar-Rahman 55:16

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 17 — Surah Ar-Rahman 55:17

(சூரியன், சந்திரன் இரண்டும்) உதிக்கும் இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன். மேலும், (அவை) மறைகின்ற இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன்

Verse 18 — Surah Ar-Rahman 55:18

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 19 — Surah Ar-Rahman 55:19

இரு கடல்களையும் அவை சந்தித்துக் கொள்ளுமாறு அவனே இணைத்தான்

Verse 20 — Surah Ar-Rahman 55:20

ஆயினும், அவை இரண்டுக்கிடையில் ஒரு தடுப்புண்டு. (அத்தடுப்பை) அவ்விரண்டும் மீறாது

Verse 21 — Surah Ar-Rahman 55:21

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 22 — Surah Ar-Rahman 55:22

அவ்விரு கடல்களிலிருந்தே முத்து, பவளம் (போன்றவை) உற்பத்தியாகின்றன

Verse 23 — Surah Ar-Rahman 55:23

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 24 — Surah Ar-Rahman 55:24

கடலில் மலைகளைப் போல செல்லும் உயர்ந்த கப்பல்களும் அவனுக்குரியனவே

Verse 25 — Surah Ar-Rahman 55:25

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 26 — Surah Ar-Rahman 55:26

பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தேபோகும்

Verse 27 — Surah Ar-Rahman 55:27

மிக கண்ணியமும் பெருமையும் உடைய உமது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும்

Verse 28 — Surah Ar-Rahman 55:28

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 29 — Surah Ar-Rahman 55:29

வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றன. (அவன் செயலற்றிருக்கவில்லை.) ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வேலையில் இருக்கிறான்

Verse 30 — Surah Ar-Rahman 55:30

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 31 — Surah Ar-Rahman 55:31

(மனித, ஜின் ஆகிய) இரு வகுப்பார்களே! நிச்சயமாக அதிசீக்கிரத்தில் நாம் உங்களை கவனிக்க முன்வருவோம்

Verse 32 — Surah Ar-Rahman 55:32

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 33 — Surah Ar-Rahman 55:33

மனித, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் இன்னும் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும், (அவற்றை ஆட்சி புரியக்கூடிய) மிகப் பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது

Verse 34 — Surah Ar-Rahman 55:34

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 35 — Surah Ar-Rahman 55:35

(நீங்கள் அவற்றை விட்டும் வெளிப்பட விரும்பிச் சென்றால்) உங்கள் மீது அக்னி ஜூவாலையும், உருக்கப்பட்ட செம்பும் எறியப்படும். அதை நீங்கள் தடுத்துக்கொள்ள முடியாது

Verse 36 — Surah Ar-Rahman 55:36

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 37 — Surah Ar-Rahman 55:37

(யுக முடிவுக்காக) வானம் பிளக்கும் சமயத்தில் அது (ஜைத்தூன்) எண்ணெய்யைப் போல் ரோஜா வர்ணமாகிவிடும்

Verse 38 — Surah Ar-Rahman 55:38

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 39 — Surah Ar-Rahman 55:39

அந்நாளில், மனிதனிடமும், ஜின்னிடமும் அவர்களின் பாவத்தைப் பற்றிக் கேட்கப்பட மாட்டாது. (அவர்களின் குறிப்பைக் கொண்டே அறிந்து கொள்ளப்படும்)

Verse 40 — Surah Ar-Rahman 55:40

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 41 — Surah Ar-Rahman 55:41

குற்றவாளிகள், அவர்களின் முகக் குறியைக் கொண்டே அறிந்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய உச்சி மயிரையும், பாதங்களையும் பிடிக்கப்(பட்டு பின்னர், நரகத்தில் தூக்கி எறியப்)படும்

Verse 42 — Surah Ar-Rahman 55:42

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 43 — Surah Ar-Rahman 55:43

இதுதான் குற்றவாளிகள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரகம்

Verse 44 — Surah Ar-Rahman 55:44

இதற்கும், கொதித்த தண்ணீருக்கும் இடையில் (இரு தலைக்கொள்ளியில் சிக்கிய எறும்பைப் போல் அவர்கள்) சுற்றித் திரிவார்கள்

Verse 45 — Surah Ar-Rahman 55:45

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 46 — Surah Ar-Rahman 55:46

எவன் தன் இறைவனின் சந்திப்பைப் பற்றிப் பயப்படுகின்றானோ, அவனுக்குச் (சொர்க்கத்தில்) இரு சோலைகள் உண்டு

Verse 47 — Surah Ar-Rahman 55:47

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 48 — Surah Ar-Rahman 55:48

அவ்விரண்டும், கிளைகள் அடர்ந்து நிறைந்த மரங்களை உடைய சோலைகள்

Verse 49 — Surah Ar-Rahman 55:49

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 50 — Surah Ar-Rahman 55:50

அவ்விரண்டிலும் இரு ஊற்றுக்கள் ஓடிக் கொண்டே இருக்கும்

Verse 51 — Surah Ar-Rahman 55:51

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 52 — Surah Ar-Rahman 55:52

அவ்விரண்டிலும் ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் (உலர்ந்தும், பச்சையுமாக) இரு வகை உண்டு

Verse 53 — Surah Ar-Rahman 55:53

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 54 — Surah Ar-Rahman 55:54

இஸ்தப்ரக்' என்னும் பட்டு விரிப்பின் மீது (உள்ள பஞ்சணைகளில்) சாய்ந்தவர்களாய் இருப்பார்கள். அவ்விரு சோலைகளில் கனிவர்க்கங்கள் அடர்ந்திருக்கும்

Verse 55 — Surah Ar-Rahman 55:55

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 56 — Surah Ar-Rahman 55:56

அவற்றில், கீழ் நோக்கிய பார்வையையுடைய (அழகிய) கன்னிகைகளும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர், அவர்களை மனிதர்களோ ஜின்களோ தீண்டியதில்லை

Verse 57 — Surah Ar-Rahman 55:57

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 58 — Surah Ar-Rahman 55:58

அவர்கள், சிகப்பு மாணிக்கத்தைப்போலும் பவளங்களைப்போலும் இருப்பார்கள்

Verse 59 — Surah Ar-Rahman 55:59

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 60 — Surah Ar-Rahman 55:60

(உங்களின்) நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா

Verse 61 — Surah Ar-Rahman 55:61

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 62 — Surah Ar-Rahman 55:62

இவ்விரண்டைத் தவிர, (சொர்க்கத்தில் அவர்களுக்கு) மேலும் இரு சோலைகளுண்டு

Verse 63 — Surah Ar-Rahman 55:63

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 64 — Surah Ar-Rahman 55:64

அவ்விரண்டும், கரும் பச்சை நிறமுடையன

Verse 65 — Surah Ar-Rahman 55:65

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 66 — Surah Ar-Rahman 55:66

அவ்விரண்டிலும், தொடர்ந்து பொங்கிக்கொண்டே இருக்கின்ற இரு ஊற்றுக்கண்கள் உண்டு

Verse 67 — Surah Ar-Rahman 55:67

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 68 — Surah Ar-Rahman 55:68

அவ்விரண்டிலும், (பலவகை) கனிகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு

Verse 69 — Surah Ar-Rahman 55:69

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 70 — Surah Ar-Rahman 55:70

அவற்றில், சிறந்த குணமுடைய அழகிகள் உள்ளனர்

Verse 71 — Surah Ar-Rahman 55:71

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 72 — Surah Ar-Rahman 55:72

(அவர்கள்தான்) ‘ஹூர்' (என்னும் வெந்நிற) கண்ணழகிகள் (முத்து மற்றும் பவளங்களால் ஆன) கூடாரங்களில் வசித்திருப்பார்கள்

Verse 73 — Surah Ar-Rahman 55:73

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 74 — Surah Ar-Rahman 55:74

இவர்களுக்கு முன்னர் அப்பெண்களை, மனிதர்களோ ஜின்களோ தீண்டியதில்லை

Verse 75 — Surah Ar-Rahman 55:75

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 76 — Surah Ar-Rahman 55:76

(அவர்களின் கணவர்கள்) சிறந்த பசுமையான, இரத்தினக் கம்பளங்களில் திண்டு தலையணைகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்

Verse 77 — Surah Ar-Rahman 55:77

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 78 — Surah Ar-Rahman 55:78

(நபியே!) மிக்க சிறப்பும், கண்ணியமும் உள்ள உமது இறைவனின் திருப்பெயர் மிக பாக்கியமுடையது