Back to Languages

Tamil - Chapter 56 - Al-Waqiah

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 1 — Surah Al-Waqiah 56:1

(யுகமுடிவு என்னும்) மாபெரும் சம்பவம் நிகழ்ந்தால்

Verse 2 — Surah Al-Waqiah 56:2

அதை(த் தடை செய்து) பொய்யாக்குவதற்கு ஒன்றுமில்லை

Verse 3 — Surah Al-Waqiah 56:3

அது (பலரின் பதவிகளைத்) தாழ்த்திவிடும். (பலரின் பதவிகளை) உயர்த்திவிடும்

Verse 4 — Surah Al-Waqiah 56:4

(அச்சமயம்) மிக்க பலமான பூகம்பம் ஏற்பட்டு

Verse 5 — Surah Al-Waqiah 56:5

மலைகள் (பெயர்ந்து ஒன்றோடொன்று மோதி) தூள் தூளாகப் பறந்து விடும்

Verse 6 — Surah Al-Waqiah 56:6

அவை (ஆகாயத்தில்) தூசிகளாகப் பறந்துவிடும்

Verse 7 — Surah Al-Waqiah 56:7

(அந்நாளில்) நீங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விடுவீர்கள்

Verse 8 — Surah Al-Waqiah 56:8

(முதலாவது:) வலப்பக்கத்திலுள்ளவர்கள். வலப்பக்கத்திலுள்ள (இ)வர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? அவர்கள் மிக பாக்கியவான்கள்)

Verse 9 — Surah Al-Waqiah 56:9

(இரண்டாவது:) இடப்பக்கத்திலுள்ளவர்கள். இடப்பக்கத்திலுள்ள (இ)வர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? இவர்கள் மிக்க துரதிர்ஷ்டசாலிகள்)

Verse 10 — Surah Al-Waqiah 56:10

(மூன்றாவது:) முன்சென்று விட்டவர்கள். (இவர்கள் நன்மையான காரியங்களில் மற்ற அனைவரையும்விட) முன்சென்று விட்டவர்கள்

Verse 11 — Surah Al-Waqiah 56:11

இவர்கள் தங்கள் (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்கள்

Verse 12 — Surah Al-Waqiah 56:12

இவர்கள் இன்பம் தரும் சொர்க்கங்களில் இருப்பார்கள்

Verse 13 — Surah Al-Waqiah 56:13

(இவர்களுடன்) முதலாவது வகுப்பாரில் ஒரு பெருங்கூட்டத்தினரும்

Verse 14 — Surah Al-Waqiah 56:14

பின்னுள்ளோரில் ஒரு சொற்ப தொகையினரும் இருப்பார்கள்

Verse 15 — Surah Al-Waqiah 56:15

பொன் வேலைப்பாடுள்ள உன்னத கட்டில்கள் மீது

Verse 16 — Surah Al-Waqiah 56:16

ஒருவரை ஒருவர் முகம் நோக்கி(ப் பஞ்சணையின் மீது) சாய்ந்தவர்களாக இருப்பார்கள்

Verse 17 — Surah Al-Waqiah 56:17

என்றென்றுமே குழந்தைகளாக இருக்கக்கூடிய சிறுவர்கள் (பணி செய்ய எந்நேரமும்) இவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்

Verse 18 — Surah Al-Waqiah 56:18

இன்பமான குடிபானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக்கொண்டு (அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்)

Verse 19 — Surah Al-Waqiah 56:19

(அக்குடிபானங்களால்) இவர்களுக்குத் தலைவலியும் ஏற்படாது; அவர்களுடைய புத்தியும் மாறாது

Verse 20 — Surah Al-Waqiah 56:20

இவர்கள் பிரியப்பட்ட கனிவர்க்கங்களையும்

Verse 21 — Surah Al-Waqiah 56:21

விரும்பிய பட்சிகளின் மாமிசத்தையும் (கைகளில் ஏந்தி சுற்றி வருவார்கள்)

Verse 22 — Surah Al-Waqiah 56:22

(அங்கு இவர்களுக்கு) ‘ஹூருல் ஈன்' (என்னும் கண்ணழகிகளான மனைவி)களும் இருப்பார்கள்

Verse 23 — Surah Al-Waqiah 56:23

அவர்கள் பேணிப் பாதுகாக்கப்படும் முத்துக்களைப் போல் இருப்பார்கள்

Verse 24 — Surah Al-Waqiah 56:24

இவை அனைத்தும் இவர்கள் செய்த நன்மைகளுக்குக் கூலியாகக் கிடைக்கும்

Verse 25 — Surah Al-Waqiah 56:25

அங்கு இவர்கள் ஒழுங்கீனமான வார்த்தைகளையும், வீணான பேச்சுக்களையும் செவியுற மாட்டார்கள்

Verse 26 — Surah Al-Waqiah 56:26

ஆயினும், ஸலாம்! ஸலாம்! (சாந்தியும், சமாதானமும்) என்ற சப்தத்தையே செவியுறுவார்கள்

Verse 27 — Surah Al-Waqiah 56:27

வலப்பக்கத்தில் உள்ளவர்களின் பாக்கியம்தான் என்ன! வலப்பக்கத்தில் இருக்கும் அவர்கள்

Verse 28 — Surah Al-Waqiah 56:28

முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்

Verse 29 — Surah Al-Waqiah 56:29

(நுனி முதல்) அடி வரை குலை குலைகளாகத் தொங்கும் (பூவில்லா) வாழை மரத்தின் கீழும்

Verse 30 — Surah Al-Waqiah 56:30

அடி சாயாத நிழலிலும் இருப்பார்கள்

Verse 31 — Surah Al-Waqiah 56:31

அங்கு(தொடர்ந்து) நீரைக் கொட்டிக் கொண்டிருக்கும் ஊற்றுக்களும்

Verse 32 — Surah Al-Waqiah 56:32

ஏராளமான கனிவர்க்கங்களும் உண்டு

Verse 33 — Surah Al-Waqiah 56:33

அதன் கனிகள் (புசிக்க) தடுக்கப்படாது, (பறிப்பதால்) குறைவுறாது

Verse 34 — Surah Al-Waqiah 56:34

(ஒன்றைப் பறித்தால், மற்றொன்று அதே இடத்தில் காணப்படும்.) உயர்ந்த மேலான விரிப்புகளில் (அமர்ந்திருப்பார்கள்)

Verse 35 — Surah Al-Waqiah 56:35

(அவர்களுடன், கண்ணழகிகளாகிய ஹூருல் ஈன் என்னும் கன்னியர்களும் இருப்பார்கள். அவர்கள் ஒருவராலும் பெற்றெடுக்கப்பட்டவர்கள் அல்லர்.) நிச்சயமாக நாம் அவர்களைச் (சொந்தமாக இவர்களுக்கெனப் புதிதாகவே) படைத்திருக்கிறோம்

Verse 36 — Surah Al-Waqiah 56:36

கன்னியர்களாக அவர்களைப் படைத்திருக்கிறோம்

Verse 37 — Surah Al-Waqiah 56:37

அவர்கள் தன் கணவனையே காதலிக்கும் சம வயதுடையவர்கள்

Verse 38 — Surah Al-Waqiah 56:38

(முன்னர் வர்ணிக்கப்பட்ட இவை) வலது பக்கத்திலுள்ளவர்களுக்குக் கிடைக்கும்

Verse 39 — Surah Al-Waqiah 56:39

(இவர்களுடன்) முன்னுள்ளோரில் ஒரு பெரும் கூட்டத்தினரும்

Verse 40 — Surah Al-Waqiah 56:40

பின்னுள்ளோரில் ஒரு பெரும் கூட்டத்தினரும் இருப்பார்கள்

Verse 41 — Surah Al-Waqiah 56:41

இடப்பக்கத்தில் உள்ளவர்களோ, இவர்களின் துர்ப்பாக்கியம்தான் என்னே

Verse 42 — Surah Al-Waqiah 56:42

(அவர்கள்) கொடிய வெப்பத்திலும், முற்றிலும் கொதிக்கும் நீரிலும்

Verse 43 — Surah Al-Waqiah 56:43

அடர்ந்த இருண்ட புகையின் மத்தியிலும் இருப்பார்கள்

Verse 44 — Surah Al-Waqiah 56:44

(அங்கு) குளிர்ச்சியான குடிபானமும் இருக்காது; கண்ணியமான (உணவு) எதுவும் இருக்காது

Verse 45 — Surah Al-Waqiah 56:45

இதற்கு முன்னர் இவர்கள், நிச்சயமாக பெரும் சுகபோகங்களில் இருந்தனர்

Verse 46 — Surah Al-Waqiah 56:46

எனினும், பெரும்பாவங்களைச் செய்வதில் உறுதியாக இருந்தனர்

Verse 47 — Surah Al-Waqiah 56:47

மேலும், என்னே! நாம் இறந்து (உக்கி) மண்ணாகவும், எலும்பாகவும் போனதன் பின்னர், மெய்யாகவே நாம் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோமா

Verse 48 — Surah Al-Waqiah 56:48

(அவ்வாறே) முன் சென்றுபோன நம் மூதாதையர்களுமா (எழுப்பப்படுவார்கள்)? என்று (பரிகாசமாகக்) கூறிக்கொண்டிருந்தனர்

Verse 49 — Surah Al-Waqiah 56:49

(நபியே!) கூறுவீராக: நிச்சயமாக (உங்களில்) முன்னுள்ளோரும், பின்னுள்ளோரும்

Verse 50 — Surah Al-Waqiah 56:50

(நீங்கள் யாவருமே) அறியப்பட்ட ஒரு நாளின் குறித்த நேரத்தில் (தவறாமல் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள்

Verse 51 — Surah Al-Waqiah 56:51

பிறகு, (கூறப்படும். இந்நாளைப்) பொய்யாக்கி வழி கெட்டவர்களே! நிச்சயமாக நீங்கள்

Verse 52 — Surah Al-Waqiah 56:52

கண்டிப்பாக கள்ளி மரத்தையே புசிப்பீர்கள்

Verse 53 — Surah Al-Waqiah 56:53

இன்னும் அதைக் கொண்டே உங்கள் வயிற்றை நிரப்புவீர்கள்

Verse 54 — Surah Al-Waqiah 56:54

அத்துடன் முற்றிலும் கொதித்த சுடு நீரைக் குடிப்பீர்கள்

Verse 55 — Surah Al-Waqiah 56:55

(அதுவும் அவசர அவசரமாக) தாகித்த ஒட்டகம் குடிப்பதைப்போல் (நீங்கள்) குடிப்பீர்கள்

Verse 56 — Surah Al-Waqiah 56:56

கூலி கொடுக்கும் நாளில் அவர்களுக்கு அளிக்கப்படும் விருந்து இதுதான்

Verse 57 — Surah Al-Waqiah 56:57

(வழிகெட்டவர்களே!) நாமே உங்களை (முதன் முறையாக) படைத்திருக்கிறோம். (ஆகவே, மறுமுறை நாம் உங்களை உயிர்ப்பிப்பதை) நீங்கள் உண்மையென நம்ப வேண்டாமா

Verse 58 — Surah Al-Waqiah 56:58

நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா

Verse 59 — Surah Al-Waqiah 56:59

அதை (சிசுவாக) நீங்கள் படைக்கிறீர்களா அல்லது நாம் படைக்கின்றோமா

Verse 60 — Surah Al-Waqiah 56:60

நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டுவருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல

Verse 61 — Surah Al-Waqiah 56:61

நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டுவருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல

Verse 62 — Surah Al-Waqiah 56:62

முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கிறீர்கள். (இதைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெறவேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்)

Verse 63 — Surah Al-Waqiah 56:63

(நீங்கள் பூமியில்) பயிரிடுபவற்றைக் கவனித்தீர்களா

Verse 64 — Surah Al-Waqiah 56:64

அதை, நீங்கள் (முளைக்க வைத்துப்) பயிராக்குகிறீர்களா அல்லது நாம் பயிராக்குகின்றோமா

Verse 65 — Surah Al-Waqiah 56:65

நாம் விரும்பினால், அதை (விளையாத) சாவிகளாக்கி விடுவோம். அந்நேரத்தில் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

Verse 66 — Surah Al-Waqiah 56:66

‘‘நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்து விட்டோம்

Verse 67 — Surah Al-Waqiah 56:67

மாறாக, எங்களுக்கு ஒன்றுமே கிடைக்காது போயிற்று'' (என்று கூறிக்கொண்டிருப்பீர்கள்)

Verse 68 — Surah Al-Waqiah 56:68

நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைக் கவனித்தீர்களா

Verse 69 — Surah Al-Waqiah 56:69

மேகத்திலிருந்து அதை நீங்கள் பொழிய வைக்கிறீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா

Verse 70 — Surah Al-Waqiah 56:70

நாம் விரும்பினால் அதை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக ஆக்கியிருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா

Verse 71 — Surah Al-Waqiah 56:71

நீங்கள் (அடுப்பில்) மூட்டுகின்ற நெருப்பையும் கவனித்தீர்களா

Verse 72 — Surah Al-Waqiah 56:72

அதன் விறகை நீங்கள் உற்பத்தி செய்கிறீர்களா? அல்லது நாம் உற்பத்தி செய்கின்றோமா

Verse 73 — Surah Al-Waqiah 56:73

(நரகத்தின் நெருப்பை உங்களுக்கு) ஞாபகமூட்டும் பொருட்டும், வழிப்போக்கருக்குப் பயனளிக்கும் பொருட்டும் அதை நாம்தான் படைத்திருக்கிறோம்

Verse 74 — Surah Al-Waqiah 56:74

ஆகவே, (நபியே!) மகத்தான உமது இறைவனின் பெயரைக்கொண்டு நீர் (அவனை) புகழ்வீராக

Verse 75 — Surah Al-Waqiah 56:75

நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் மீது நாம் சத்தியம் செய்கிறோம்

Verse 76 — Surah Al-Waqiah 56:76

மனிதர்களே! (உங்களுக்கு) அறிவிருந்தால் நிச்சயமாக இது ஒரு மகத்தான சத்தியம் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்

Verse 77 — Surah Al-Waqiah 56:77

நிச்சயமாக இது மிக்க கண்ணியமுள்ள குர்ஆனாகும்

Verse 78 — Surah Al-Waqiah 56:78

(இது ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது

Verse 79 — Surah Al-Waqiah 56:79

பரிசுத்தவான்களைத் தவிர, (மற்றெவரும்) இதைத் தொட மாட்டார்கள்

Verse 80 — Surah Al-Waqiah 56:80

உலகத்தார் அனைவரின் (எஜமானாகிய) இறைவனால் இது இறக்கப்பட்டது

Verse 81 — Surah Al-Waqiah 56:81

ஆகவே, இதிலுள்ள விஷயங்களையும் நீங்கள் அலட்சியம் செய்யக் கருதுகிறீர்களா

Verse 82 — Surah Al-Waqiah 56:82

அல்லது பொய்யாக்குவதையே நீங்கள் உங்கள் தொழிலாக்கிக் கொள்கிறீர்களா

Verse 83 — Surah Al-Waqiah 56:83

(உங்களில் மரணிக்கும் ஒருவரின் உயிர்) தொண்டைக் குழியை அடைந்தால்

Verse 84 — Surah Al-Waqiah 56:84

அந்நேரத்தில் நீங்கள் (இறப்பவனுக்குச் சமீபமாயிருந்தும், ஒன்றும் செய்ய முடியாமல்) பரக்கப் பரக்க விழிக்கிறீர்கள்

Verse 85 — Surah Al-Waqiah 56:85

ஆயினும், நாம் அவனுக்கு உங்களைவிட மிக சமீபமாக இருக்கிறோம். எனினும், நீங்கள் (நம்மைப்) பார்ப்பதில்லை

Verse 86 — Surah Al-Waqiah 56:86

நீங்கள் எவருக்குமே கட்டுப்படாமல் (பூரண சுதந்திரம் உடையவர்களாக) இருந்தால்

Verse 87 — Surah Al-Waqiah 56:87

மெய்யாகவே, நீங்கள் (இதில்) உண்மை சொல்பவர்களாகவுமிருந்தால், (இறந்த அவனுடைய உயிரை) நீங்கள் மீட்டுக் கொண்டு வரவேண்டியது தானே

Verse 88 — Surah Al-Waqiah 56:88

(இறந்தவர் இறையச்சமுடையவராக இருந்து அல்லாஹ்வின்) நெருக்கத்தை பெற்றவர்களில் ஒருவராக இருந்தால்

Verse 89 — Surah Al-Waqiah 56:89

அவருக்குச் சுகமும் மகிழ்ச்சியும் நறுமனமும் உண்டு; இன்பமளிக்கும் சொர்க்கமும் உண்டு

Verse 90 — Surah Al-Waqiah 56:90

(அதிலும்) அவர் வலப்பக்கத்திலுள்ளவராக இருந்தாலோ

Verse 91 — Surah Al-Waqiah 56:91

அவரை நோக்கி ‘‘வலப்பக்கத்தில் உள்ளவர்களில் இருந்து உமக்கு ‘‘ஸலாம்'' ஈடேற்றம் உண்டாகுக! (என்ற முகமன்) கூறப்படும்

Verse 92 — Surah Al-Waqiah 56:92

அவன் வழிகெட்டவனாகவும் (இவ்வேதத்தைப்) பொய்யாக்குகிறவனாகவும் இருந்தால்

Verse 93 — Surah Al-Waqiah 56:93

முற்றிலும் கொதித்த சுடுநீர் அவனுக்கு விருந்தாகும்

Verse 94 — Surah Al-Waqiah 56:94

இன்னும், நரகத்தில் தள்ளப்படுவான்

Verse 95 — Surah Al-Waqiah 56:95

நிச்சயமாக இது சந்தேகமற்ற உண்மையாகும்

Verse 96 — Surah Al-Waqiah 56:96

ஆகவே (நபியே!) நீர் மகத்தான உமது இறைவனின் திருப்பெயரைக் கூறி புகழ்ந்து கொண்டிருப்பீராக