Back to Languages

Tamil - Chapter 75 - Al-Qiyamah

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 1 — Surah Al-Qiyamah 75:1

மறுமை நாளின் மீது நான் சத்தியம் செய்கிறேன்

Verse 2 — Surah Al-Qiyamah 75:2

(குற்றம் செய்தவனை) நிந்திக்கும் அவனுடைய மனசாட்சியின் மீதும் நான் சத்தியம் செய்கிறேன்

Verse 3 — Surah Al-Qiyamah 75:3

(இறந்து உக்கி மண்ணாய்ப் போன) அவனுடைய எலும்புகளை, நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறானா

Verse 4 — Surah Al-Qiyamah 75:4

அவ்வாறல்ல! அவனுடைய (சரீர) அமைப்பை (இறந்த பின்னரும் முன்னிருந்தபடி) சரிப்படுத்த நாம் ஆற்றலுடையோம்

Verse 5 — Surah Al-Qiyamah 75:5

எனினும், மனிதன் இறைவன் முன்பாகவே குற்றம் செய்யக் கருதுகிறான்

Verse 6 — Surah Al-Qiyamah 75:6

(பரிகாசமாக) ‘‘மறுமை நாள் எப்பொழுது வரும்'' என்று கேட்கிறான்

Verse 7 — Surah Al-Qiyamah 75:7

அது (வரும்) சமயம் பார்வை தட்டழிந்து விடும்

Verse 8 — Surah Al-Qiyamah 75:8

சந்திரனின் பிரகாசம் மங்கி விடும்

Verse 9 — Surah Al-Qiyamah 75:9

(அதுநாள் வரை பிரிந்திருந்த) சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டு விடும்(போது)

Verse 10 — Surah Al-Qiyamah 75:10

அந்நாளில் (தப்பித்துக்கொள்ள) “எங்கு ஓடுவது'' என்று மனிதன் கேட்பான்

Verse 11 — Surah Al-Qiyamah 75:11

‘‘முடியவே முடியாது. தப்ப இடமில்லை'' (என்று கூறப்படும்)

Verse 12 — Surah Al-Qiyamah 75:12

(நபியே!) அந்நாளில் உமது இறைவனிடமே (அனைவரும்) நிற்க வேண்டியதிருக்கிறது

Verse 13 — Surah Al-Qiyamah 75:13

மனிதன், முன் பின் செய்த பாவங்களைப் பற்றி அந்நாளில் அவனுக்கு அறிவுறுத்தப்படும்

Verse 14 — Surah Al-Qiyamah 75:14

தவிர, ஒவ்வொரு மனிதனும் தன் நிலைமையைத் தானாகவும் அறிந்துகொள்வான்

Verse 15 — Surah Al-Qiyamah 75:15

ஆகவே, அவன் (தன் குற்றங்களுக்கு) எவ்வளவு புகல்களைக் கூறிய போதிலும் (அது அங்கீகரிக்கப்படாது)

Verse 16 — Surah Al-Qiyamah 75:16

(நபியே! வஹ்யி மூலம் ஜிப்ரயீல் ஓதிக்காண்பிக்கும் வசனங்கள் தவறி விடுமோ என்று பயந்து, அவர் ஓதி முடிப்பதற்கு முன்னர்) நீர் அவசரப்பட்டு அதை ஓத உமது நாவை அசைக்காதீர்

Verse 17 — Surah Al-Qiyamah 75:17

ஏனென்றால், அதை ஒன்று சேர்த்து (நீர்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும்

Verse 18 — Surah Al-Qiyamah 75:18

ஆகவே, (ஜிப்ரயீல் மூலம்) அதை நாம் (உமக்கு) ஓதிக்காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதை நீர் பின்தொடர்ந்து ஓதுவீராக

Verse 19 — Surah Al-Qiyamah 75:19

பின்னர், அதை விவரித்துக் கூறுவதும் நம்மீதுள்ள கடமையாகும்

Verse 20 — Surah Al-Qiyamah 75:20

எனினும் (மனிதர்களே!) நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையைத்தான் விரும்புகிறீர்கள்

Verse 21 — Surah Al-Qiyamah 75:21

(ஆதலால்தான், இம்மையை விரும்பி) மறுமையை நீங்கள் விட்டு விடுகிறீர்கள்

Verse 22 — Surah Al-Qiyamah 75:22

அந்நாளில் சில(ருடைய) முகங்கள் மிக்க ஒளிவுடன் மகிழ்ச்சியுடையவையாக இருக்கும்

Verse 23 — Surah Al-Qiyamah 75:23

(அவை) தங்கள் இறைவனை நோக்கிய வண்ணமாக இருக்கும்

Verse 24 — Surah Al-Qiyamah 75:24

வேறு சில(ருடைய) முகங்களோ அந்நாளில் (துக்கத்தால்) வாடியவையாக இருக்கும்

Verse 25 — Surah Al-Qiyamah 75:25

(பாவச் சுமையின் காரணமாகத்) தங்கள் இடுப்பு முறிந்துவிடுமோ என்று எண்ணி(ப் பயந்து) கொண்டிருப்பார்கள்

Verse 26 — Surah Al-Qiyamah 75:26

எனினும், (எவனேனும் நோய்வாய்ப்பட்டு, அவனின்) உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால்

Verse 27 — Surah Al-Qiyamah 75:27

(அவனுக்குச் சமீபத்தில் இருப்பவர்கள் அவனைச் சுகமாக்க) மந்திரிப்பவன் யார்? (எங்கிருக்கிறான்?) என்று கேட்கின்றனர்

Verse 28 — Surah Al-Qiyamah 75:28

எனினும், அவனோ நிச்சயமாக இதுதான் (தன்) பிரிவினை என்பதை (உறுதியாக) அறிந்துகொள்கிறான்

Verse 29 — Surah Al-Qiyamah 75:29

(அவனுடைய) கெண்டைக்கால், கெண்டைக் காலோடு பின்னிக் கொள்ளும்

Verse 30 — Surah Al-Qiyamah 75:30

அச்சமயம், அவன் (காரியம் முடிவு பெற்று) உமது இறைவன் பக்கம் ஓட்டப்பட்டு விடுகிறான்

Verse 31 — Surah Al-Qiyamah 75:31

(அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை; தொழவுமில்லை

Verse 32 — Surah Al-Qiyamah 75:32

ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான்

Verse 33 — Surah Al-Qiyamah 75:33

பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்று விட்டான்

Verse 34 — Surah Al-Qiyamah 75:34

(மனிதனே!) உனக்குக் கேடுதான்; மேலும் கேடுதான்

Verse 35 — Surah Al-Qiyamah 75:35

பின்னர், உனக்குக் கேடுதான்! மேலும் கேடுதான் (உனக்கு)

Verse 36 — Surah Al-Qiyamah 75:36

(ஒரு கேள்வியும் தம்மிடம் கேட்காது) சும்மா விட்டு விடப்படுவோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா

Verse 37 — Surah Al-Qiyamah 75:37

அவன் (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட ஓர் இந்திரியத் துளியாக இருக்க வில்லையா

Verse 38 — Surah Al-Qiyamah 75:38

(இந்திரியமாக இருந்த) பின்னர், அவன் கருவாக மாறினான் (அவனை) அல்லாஹ்தான் படைத்து முழுமையான மனிதனாக ஆக்கிவைத்தான்

Verse 39 — Surah Al-Qiyamah 75:39

ஆண், பெண் ஜோடிகளையும் அதிலிருந்து உற்பத்தி செய்கிறான்

Verse 40 — Surah Al-Qiyamah 75:40

(இவற்றையெல்லாம் செய்த) அவன் மரணித்தவர்களை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவனாக இல்லையா