Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 77 - Al-Mursalat
Translation by Abdulhameed Baqavi — Permalink
Verse 1 — Surah Al-Mursalat 77:1
நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீது சத்தியமாக
Verse 2 — Surah Al-Mursalat 77:2
இன்னும் அதி வேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகள் மீது சத்தியமாக
Verse 3 — Surah Al-Mursalat 77:3
(மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்கள் மீதும் சத்தியமாக
Verse 4 — Surah Al-Mursalat 77:4
(உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப்பவை(யான வேதங்கள்) மீதும் சத்தியமாக
Verse 5 — Surah Al-Mursalat 77:5
மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக
Verse 6 — Surah Al-Mursalat 77:6
மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக
Verse 7 — Surah Al-Mursalat 77:7
நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்
Verse 8 — Surah Al-Mursalat 77:8
அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும்
Verse 9 — Surah Al-Mursalat 77:9
அப்போது வானம் திறக்கப்பட்டுவிடும்
Verse 10 — Surah Al-Mursalat 77:10
அப்போது மலைகள் (தூசிகளைப் போல்) தவிடு பொடியாக்கப்படும்
Verse 11 — Surah Al-Mursalat 77:11
அப்போது தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்
Verse 12 — Surah Al-Mursalat 77:12
(இவை எல்லாம்) எதுவரை பிற்படுத்தப்பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீர் அறிவீரா)
Verse 13 — Surah Al-Mursalat 77:13
தீர்ப்பு கூறப்படும் நாள் வரைதான்
Verse 14 — Surah Al-Mursalat 77:14
(நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீர் அறிவீரா
Verse 15 — Surah Al-Mursalat 77:15
(நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்
Verse 16 — Surah Al-Mursalat 77:16
(அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா
Verse 17 — Surah Al-Mursalat 77:17
அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்து போன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம்
Verse 18 — Surah Al-Mursalat 77:18
(அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளிகளையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம்
Verse 19 — Surah Al-Mursalat 77:19
ஆகவே, (நம் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்
Verse 20 — Surah Al-Mursalat 77:20
ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களைப் படைக்கவில்லையா
Verse 21 — Surah Al-Mursalat 77:21
அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்
Verse 22 — Surah Al-Mursalat 77:22
அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்
Verse 23 — Surah Al-Mursalat 77:23
பின்னர் நாமே அதை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர்
Verse 24 — Surah Al-Mursalat 77:24
ஆகவே, (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்
Verse 25 — Surah Al-Mursalat 77:25
பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா
Verse 26 — Surah Al-Mursalat 77:26
பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா
Verse 27 — Surah Al-Mursalat 77:27
அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து (அவற்றிலிருந்து) மதுரமான நீரையும் உங்களுக்குப் புகட்டுகிறோம்
Verse 28 — Surah Al-Mursalat 77:28
(நம் அருட்கொடைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்
Verse 29 — Surah Al-Mursalat 77:29
‘‘எ(ந்த நரகத்)தை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அதன் பாலே நீங்கள் செல்லுங்கள்
Verse 30 — Surah Al-Mursalat 77:30
மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்'' (என்றும் கூறப்படும்)
Verse 31 — Surah Al-Mursalat 77:31
அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது
Verse 32 — Surah Al-Mursalat 77:32
(எனினும்,) பெரிய மாளிகைகளைப்போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக் கொண்டே இருக்கும்
Verse 33 — Surah Al-Mursalat 77:33
அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும்
Verse 34 — Surah Al-Mursalat 77:34
(இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்
Verse 35 — Surah Al-Mursalat 77:35
இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்
Verse 36 — Surah Al-Mursalat 77:36
மேலும், புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது
Verse 37 — Surah Al-Mursalat 77:37
(இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்
Verse 38 — Surah Al-Mursalat 77:38
இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள்ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம்
Verse 39 — Surah Al-Mursalat 77:39
ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, ‘‘தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்'' (என்றும் கூறப்படும்)
Verse 40 — Surah Al-Mursalat 77:40
(இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்
Verse 41 — Surah Al-Mursalat 77:41
நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சொர்க்கத்திலுள்ள மரங்களின்) நிழல்களிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள்
Verse 42 — Surah Al-Mursalat 77:42
அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு
Verse 43 — Surah Al-Mursalat 77:43
(அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவற்றைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்'' (என்று கூறப்படும்)
Verse 44 — Surah Al-Mursalat 77:44
இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுப்போம்
Verse 45 — Surah Al-Mursalat 77:45
(இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்
Verse 46 — Surah Al-Mursalat 77:46
(இதைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தான்
Verse 47 — Surah Al-Mursalat 77:47
(இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்
Verse 48 — Surah Al-Mursalat 77:48
அவர்களை நோக்கி, ‘‘(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்'' என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள்
Verse 49 — Surah Al-Mursalat 77:49
(அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்
Verse 50 — Surah Al-Mursalat 77:50
இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ