Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 78 - An-Naba
Translation by Abdulhameed Baqavi — Permalink
Verse 1 — Surah An-Naba 78:1
(நபியே!) எதைப்பற்றி அவர்கள் (தங்களுக்குள்) கேட்டுக் கொள்கின்றனர்
Verse 2 — Surah An-Naba 78:2
மகத்தான செய்தியைப் பற்றிய(ல்லவா)
Verse 3 — Surah An-Naba 78:3
அதைப்பற்றி அவர்கள் (உண்மைக்கு) முரணான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்
Verse 4 — Surah An-Naba 78:4
(தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்
Verse 5 — Surah An-Naba 78:5
பின்னர், அவசியம் அதிசீக்கிரத்தில் (அதன் உண்மையை) நன்கு அறிந்து கொள்வார்கள்
Verse 6 — Surah An-Naba 78:6
(இவ்வளவு பெரிய) பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக அமைக்க வில்லையா
Verse 7 — Surah An-Naba 78:7
இன்னும், (அதில் நாம்) மலைகளை முளைகளாக (நிறுத்தவில்லையா)
Verse 8 — Surah An-Naba 78:8
ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கிறோம்
Verse 9 — Surah An-Naba 78:9
நாமே உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம்
Verse 10 — Surah An-Naba 78:10
நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக ஆக்கினோம்
Verse 11 — Surah An-Naba 78:11
நாமே பகலை (உங்கள்) வாழ்வைத் தேடிக்கொள்ளும் நேரமாக்கினோம்
Verse 12 — Surah An-Naba 78:12
உங்களுக்கு மேலிருக்கும் பலமான ஏழு வானங்களையும் நாமே அமைத்தோம்
Verse 13 — Surah An-Naba 78:13
அதில் (சூரியனைப்) பிரகாசிக்கும் தீபமாக அமைத்தோம்
Verse 14 — Surah An-Naba 78:14
கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கிறோம்
Verse 15 — Surah An-Naba 78:15
அதைக் கொண்டு தானியங்களையும் புற்பூண்டுகளையும் முளைப்பிக்கிறோம்
Verse 16 — Surah An-Naba 78:16
இன்னும், கிளைகள் அடர்ந்த சோலைகளையும் (உற்பத்தி செய்கிறோம்)
Verse 17 — Surah An-Naba 78:17
நிச்சயமாக (இவர்கள் தர்க்கித்து நிராகரித்துக் கொண்டிருக்கும்) அந்தத் தீர்ப்பு நாள்தான் (விசாரணைக்குக்) குறிப்பிட்ட காலமாகும்
Verse 18 — Surah An-Naba 78:18
(அதற்காக) ஸூர் (என்னும் எக்காளம்) ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்
Verse 19 — Surah An-Naba 78:19
வானம் திறக்கப்பட்டு (அதில்) பல வழிகள் ஏற்பட்டு விடும்
Verse 20 — Surah An-Naba 78:20
மலைகள் (தம் இடத்திலிருந்து) பெயர்க்கப்பட்டு தூள்தூளாகி (பறந்து) விடும்
Verse 21 — Surah An-Naba 78:21
நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது
Verse 22 — Surah An-Naba 78:22
(பாவிகளாகிய) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே
Verse 23 — Surah An-Naba 78:23
அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள்
Verse 24 — Surah An-Naba 78:24
அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்
Verse 25 — Surah An-Naba 78:25
அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்
Verse 26 — Surah An-Naba 78:26
இது (அவர்கள் செயலுக்குத்) தகுமான கூலியாகும்
Verse 27 — Surah An-Naba 78:27
ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் (மறுமையின்) கேள்வி கணக்கை நம்பவே இல்லை
Verse 28 — Surah An-Naba 78:28
அவர்கள் நம் வசனங்களை மிக அலட்சியமாகப் பொய்ப்பித்தார்கள்
Verse 29 — Surah An-Naba 78:29
எனினும், இவை அனைத்தையும் நாம் (நம் குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம்
Verse 30 — Surah An-Naba 78:30
ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்த மாட்டோம். ஆகவே, (இதைச்) சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறுவோம்)
Verse 31 — Surah An-Naba 78:31
(ஆயினும்), இறையச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சொர்க்கம் என்னும்) இடம் உண்டு
Verse 32 — Surah An-Naba 78:32
(அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு
Verse 33 — Surah An-Naba 78:33
(மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்
Verse 34 — Surah An-Naba 78:34
(பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்)
Verse 35 — Surah An-Naba 78:35
அங்கு அவர்கள் வீண் வார்த்தையையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள்
Verse 36 — Surah An-Naba 78:36
(இவையெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உமது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும்
Verse 37 — Surah An-Naba 78:37
அவனே வானங்கள், பூமி, இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் உரிமையாளனும் அளவற்ற அருளாளனும் ஆவான். எனினும், (அந்நாளில் எவருமே) அவன் முன் பேச சக்தி பெறமாட்டார்கள்
Verse 38 — Surah An-Naba 78:38
ஜிப்ரயீலும், வானவர்களும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து ‘‘சரி! பேசுவீராக!'' எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார்
Verse 39 — Surah An-Naba 78:39
இத்தகைய நாள் (வருவது) உறுதி! ஆகவே, விரும்பியவன் தன் இறைவனிடமே தங்கும் இடத்தைத் தேடிக்கொள்ளவும்
Verse 40 — Surah An-Naba 78:40
சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கிறோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் கரங்கள் செய்த செயலின் பலனை(த் தன் கண்ணால்) கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ தான் மண்ணாக ஆகவேண்டுமே என்று புலம்புவான்