Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 79 - An-Naziat
Translation by Abdulhameed Baqavi — Permalink
Verse 1 — Surah An-Naziat 79:1
(பாவிகளின் உயிர்களைப்) பலமாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக
Verse 2 — Surah An-Naziat 79:2
(நல்லவர்களின் ஆத்மாவை) எளிதாகக் கைப்பற்றுபவர்கள் மீது சத்தியமாக
Verse 3 — Surah An-Naziat 79:3
(ஆகாயத்திலும், கடலிலும்) அதிவேகமாக(ப் பறந்து) நீந்திச் செல்லும் வானவர்கள் மீது சத்தியமாக
Verse 4 — Surah An-Naziat 79:4
(இறைவனின் கட்டளையை நிறைவேற்ற) போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்பவர்கள் மீதும் சத்தியமாக
Verse 5 — Surah An-Naziat 79:5
எல்லாக் காரியங்களையும் (இறைவனின் கட்டளைப்படி) நிர்வகிக்கின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக
Verse 6 — Surah An-Naziat 79:6
(கொடிய பூகம்பத்தால் பூமி) பலமாக அதிர்ச்சியுறும் நாளில்
Verse 7 — Surah An-Naziat 79:7
(மேலும்) அதைத் தொடர்ந்து (பல பூகம்ப அதிர்ச்சிகள்) வரும் (நாளில் உலகம் முடிவுற்றே தீரும்)
Verse 8 — Surah An-Naziat 79:8
அந்நாளில், உள்ளங்களெல்லாம் திடுக்கிட்டு நடுங்கிக் கொண்டிருக்கும்
Verse 9 — Surah An-Naziat 79:9
பார்வைகளெல்லாம் (பயத்தால்) கீழ்நோக்கி நிற்கும்
Verse 10 — Surah An-Naziat 79:10
(இவ்வாறிருக்க, நிராகரிப்பவர்கள் இதை மறுத்து) ‘‘நாம் (இறந்த பின்னர்) மெய்யாகவே நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா
Verse 11 — Surah An-Naziat 79:11
(அதுவும்) நாம் உக்கி எலும்பாகப் போனதன் பின்னரா (உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம்?) என்று கூறுகின்றனர்
Verse 12 — Surah An-Naziat 79:12
‘‘அவ்வாறாயின், அது பெரும் நஷ்டமான மீட்சிதான் என்றும் அவர்கள் (பரிகாசமாகக்)'' கூறுகின்றனர்
Verse 13 — Surah An-Naziat 79:13
(இது அவர்களுக்கு அசாத்தியமாகத் தோன்றலாம்; எனினும், நமக்கோ) அது ஓர் அதட்டல் (ஒரு உறுத்தல், ஒரு சப்தம்)தான்
Verse 14 — Surah An-Naziat 79:14
உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்றெழுந்து) வந்து ஒரு திடலில் கூடிவிடுவார்கள்
Verse 15 — Surah An-Naziat 79:15
(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு எட்டியதா
Verse 16 — Surah An-Naziat 79:16
‘துவா' என்னும் பரிசுத்தமான ஓடைக்கு அவருடைய இறைவன் அவரை அழைத்ததை நினைவு கூறுங்கள்
Verse 17 — Surah An-Naziat 79:17
‘‘ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்
Verse 18 — Surah An-Naziat 79:18
(அவனிடம்) கூறுவீராக! ‘‘(பாவங்களை விட்டும்) நீ பரிசுத்தவானாக ஆக உனக்கு விருப்பம் தானா
Verse 19 — Surah An-Naziat 79:19
(அவ்வாறாயின்) உன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய வழியை நான் உனக்கு அறிவிக்கிறேன். அவனுக்கு நீ பயந்துகொள்'' (இவ்வாறு, மூஸாவுக்கு இறைவன் கட்டளையிட்டான்)
Verse 20 — Surah An-Naziat 79:20
(மூஸா அவனிடம் சென்று அவ்வாறு கூறிப்) பெரியதொரு அத்தாட்சியையும் அவனுக்குக் காண்பித்தார்
Verse 21 — Surah An-Naziat 79:21
(எனினும்) அவனோ, அதைப் பொய்யாக்கி (அவர் கூறியதற்கு) மாறு செய்தான்
Verse 22 — Surah An-Naziat 79:22
பின்னர் (அவரை விட்டும்) விலகி (அவருக்குத் தீங்கிழைக்கவும்) முயற்சி செய்தான்
Verse 23 — Surah An-Naziat 79:23
இதற்காக(த் தன் மக்களை) ஒன்று கூட்டி (அவர்களுக்கு) அறிக்கையிட்டான்
Verse 24 — Surah An-Naziat 79:24
(அவர்களை நோக்கி) ‘‘நான்தான் உங்கள் மேலான இறைவன்'' என்று கூறினான்
Verse 25 — Surah An-Naziat 79:25
ஆதலால், அல்லாஹ் அவனை இம்மை மறுமையின் வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டான்
Verse 26 — Surah An-Naziat 79:26
பயப்படுபவர்களுக்கு மெய்யாகவே இதில் ஒரு நல்ல படிப்பினை இருக்கிறது
Verse 27 — Surah An-Naziat 79:27
(மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அவ்வானத்தைப் படைத்தான்
Verse 28 — Surah An-Naziat 79:28
அவனே அதன் முகட்டை உயர்த்தி, அதை ஒழுங்குபடுத்தினான்
Verse 29 — Surah An-Naziat 79:29
அவனே, அதன் இரவை இருளாக்கி(ச் சூரியனைக் கொண்டு) அதன் பகலை வெளியாக்கி (வெளிச்சமாக்கி)னான்
Verse 30 — Surah An-Naziat 79:30
இதற்குப் பின்னர், அவனே பூமியை விரித்தான்
Verse 31 — Surah An-Naziat 79:31
அவனே அதிலிருந்து நீரையும், மேய்ச்சல் பொருள்களையும் வெளியாக்குகிறான்
Verse 32 — Surah An-Naziat 79:32
மலைகளையும் அவனே (அதில்) உறுதியாக ஊன்றினான்
Verse 33 — Surah An-Naziat 79:33
உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கக்கூடியவையாக (அவற்றை அதில் அமைத்தான்)
Verse 34 — Surah An-Naziat 79:34
(மறுமையின்) பெரும் அமளி வந்தால்
Verse 35 — Surah An-Naziat 79:35
மனிதன் செய்ததெல்லாம் அந்நாளில் அவனுடைய ஞாபகத்திற்கு வந்துவிடும்
Verse 36 — Surah An-Naziat 79:36
மனிதர்கள் கண் முன் நரகம் கொண்டு வந்து வைக்கப்பட்டு விடும்
Verse 37 — Surah An-Naziat 79:37
எவன் வரம்பு மீறினானோ
Verse 38 — Surah An-Naziat 79:38
(மறுமையைப் புறக்கணித்து) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொண்டானோ
Verse 39 — Surah An-Naziat 79:39
அவன் செல்லும் இடம் நிச்சயமாக நரகம்தான்
Verse 40 — Surah An-Naziat 79:40
எவன் தன் இறைவனின் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத்தடுத்துக் கொண்டானோ
Verse 41 — Surah An-Naziat 79:41
அவன் செல்லுமிடம் நிச்சயமாக சொர்க்கம்தான்
Verse 42 — Surah An-Naziat 79:42
(நபியே!) மறுமையைப் பற்றி, அது எப்பொழுது வருமென உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்
Verse 43 — Surah An-Naziat 79:43
(எப்பொழுது வருமென்று) எதற்காக நீர் கூற வேண்டும்
Verse 44 — Surah An-Naziat 79:44
அதன் முடிவெல்லாம், உமது இறைவனிடமே இருக்கிறது
Verse 45 — Surah An-Naziat 79:45
அந்நாளைப் பற்றிப் பயப்படக்கூடியவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை. (அது வரும் காலத்தையும், நேரத்தையும் அறிவிப்பது உமது கடமையல்ல)
Verse 46 — Surah An-Naziat 79:46
அதை அவர்கள் கண்ணால் காணும் நாளில், மாலையிலோ அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமே தவிர (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்றே அவர்களுக்குத் தோன்றும்