Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 94 - Ash-Sharh
Translation by Abdulhameed Baqavi — Permalink
Verse 1 — Surah Ash-Sharh 94:1
(நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா
Verse 2 — Surah Ash-Sharh 94:2
உமது சுமையையும் உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்
Verse 3 — Surah Ash-Sharh 94:3
அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது
Verse 4 — Surah Ash-Sharh 94:4
உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம்
Verse 5 — Surah Ash-Sharh 94:5
நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது
Verse 6 — Surah Ash-Sharh 94:6
மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது
Verse 7 — Surah Ash-Sharh 94:7
ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக
Verse 8 — Surah Ash-Sharh 94:8
மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக