Back to Languages

Tamil - Chapter 97 - Al-Qadr

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 1 — Surah Al-Qadr 97:1

நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலதுல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கிவைத்தோம்

Verse 2 — Surah Al-Qadr 97:2

(நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீர் அறிவீரா

Verse 3 — Surah Al-Qadr 97:3

கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்

Verse 4 — Surah Al-Qadr 97:4

அதில் வானவர்களும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்

Verse 5 — Surah Al-Qadr 97:5

‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது)