Verse 1 — Surah Al-Fatiha 1:1
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்)
Verse 2 — Surah Al-Fatiha 1:2
அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்
Verse 3 — Surah Al-Fatiha 1:3
(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
Verse 4 — Surah Al-Fatiha 1:4
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்)
Verse 5 — Surah Al-Fatiha 1:5
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்
Verse 6 — Surah Al-Fatiha 1:6
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக
Verse 7 — Surah Al-Fatiha 1:7
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல