Verse 1 — Surah An-Nas 114:1
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்
Verse 2 — Surah An-Nas 114:2
(அவனே) மனிதர்களின் அரசன்
Verse 3 — Surah An-Nas 114:3
(அவனே) மனிதர்களின் நாயன்
Verse 4 — Surah An-Nas 114:4
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்)
Verse 5 — Surah An-Nas 114:5
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்
Verse 6 — Surah An-Nas 114:6
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்