Back to Languages

Tamil - Chapter 55 - Ar-Rahman

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Ar-Rahman 55:1

அளவற்ற அருளாளன்

Verse 2 — Surah Ar-Rahman 55:2

இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்

Verse 3 — Surah Ar-Rahman 55:3

அவனே மனிதனைப் படைத்தான்

Verse 4 — Surah Ar-Rahman 55:4

அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்

Verse 5 — Surah Ar-Rahman 55:5

சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன

Verse 6 — Surah Ar-Rahman 55:6

(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன

Verse 7 — Surah Ar-Rahman 55:7

மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்

Verse 8 — Surah Ar-Rahman 55:8

நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக

Verse 9 — Surah Ar-Rahman 55:9

ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்

Verse 10 — Surah Ar-Rahman 55:10

இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்

Verse 11 — Surah Ar-Rahman 55:11

அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்

Verse 12 — Surah Ar-Rahman 55:12

தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன

Verse 13 — Surah Ar-Rahman 55:13

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 14 — Surah Ar-Rahman 55:14

சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்

Verse 15 — Surah Ar-Rahman 55:15

நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்

Verse 16 — Surah Ar-Rahman 55:16

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 17 — Surah Ar-Rahman 55:17

இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே

Verse 18 — Surah Ar-Rahman 55:18

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 19 — Surah Ar-Rahman 55:19

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்

Verse 20 — Surah Ar-Rahman 55:20

(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா

Verse 21 — Surah Ar-Rahman 55:21

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 22 — Surah Ar-Rahman 55:22

அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன

Verse 23 — Surah Ar-Rahman 55:23

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 24 — Surah Ar-Rahman 55:24

அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன

Verse 25 — Surah Ar-Rahman 55:25

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 26 — Surah Ar-Rahman 55:26

(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே

Verse 27 — Surah Ar-Rahman 55:27

மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்

Verse 28 — Surah Ar-Rahman 55:28

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 29 — Surah Ar-Rahman 55:29

வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும், (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்

Verse 30 — Surah Ar-Rahman 55:30

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 31 — Surah Ar-Rahman 55:31

இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்

Verse 32 — Surah Ar-Rahman 55:32

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 33 — Surah Ar-Rahman 55:33

மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது

Verse 34 — Surah Ar-Rahman 55:34

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 35 — Surah Ar-Rahman 55:35

(மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்

Verse 36 — Surah Ar-Rahman 55:36

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 37 — Surah Ar-Rahman 55:37

எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்

Verse 38 — Surah Ar-Rahman 55:38

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 39 — Surah Ar-Rahman 55:39

எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது

Verse 40 — Surah Ar-Rahman 55:40

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 41 — Surah Ar-Rahman 55:41

குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்

Verse 42 — Surah Ar-Rahman 55:42

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 43 — Surah Ar-Rahman 55:43

அன்று அவர்களிடம்; "இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்" (என்று கூறப்படும்)

Verse 44 — Surah Ar-Rahman 55:44

அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்

Verse 45 — Surah Ar-Rahman 55:45

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 46 — Surah Ar-Rahman 55:46

தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன

Verse 47 — Surah Ar-Rahman 55:47

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 48 — Surah Ar-Rahman 55:48

அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை

Verse 49 — Surah Ar-Rahman 55:49

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 50 — Surah Ar-Rahman 55:50

அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்

Verse 51 — Surah Ar-Rahman 55:51

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 52 — Surah Ar-Rahman 55:52

அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு

Verse 53 — Surah Ar-Rahman 55:53

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 54 — Surah Ar-Rahman 55:54

அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள், அவற்றின் உள் பாகங்கள் "இஸ்தப்ரக்" என்னும் பட்டினாலுள்ளவை, மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்

Verse 55 — Surah Ar-Rahman 55:55

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 56 — Surah Ar-Rahman 55:56

அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை

Verse 57 — Surah Ar-Rahman 55:57

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 58 — Surah Ar-Rahman 55:58

அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்

Verse 59 — Surah Ar-Rahman 55:59

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 60 — Surah Ar-Rahman 55:60

நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா

Verse 61 — Surah Ar-Rahman 55:61

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 62 — Surah Ar-Rahman 55:62

மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன

Verse 63 — Surah Ar-Rahman 55:63

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 64 — Surah Ar-Rahman 55:64

அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை

Verse 65 — Surah Ar-Rahman 55:65

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 66 — Surah Ar-Rahman 55:66

அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்

Verse 67 — Surah Ar-Rahman 55:67

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 68 — Surah Ar-Rahman 55:68

அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு

Verse 69 — Surah Ar-Rahman 55:69

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 70 — Surah Ar-Rahman 55:70

அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்

Verse 71 — Surah Ar-Rahman 55:71

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 72 — Surah Ar-Rahman 55:72

ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்

Verse 73 — Surah Ar-Rahman 55:73

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 74 — Surah Ar-Rahman 55:74

அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை

Verse 75 — Surah Ar-Rahman 55:75

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 76 — Surah Ar-Rahman 55:76

(அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்

Verse 77 — Surah Ar-Rahman 55:77

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்

Verse 78 — Surah Ar-Rahman 55:78

மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது