Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 69 - Al-Haqqah
Translation by Jan Turst Foundation — Permalink
Verse 1 — Surah Al-Haqqah 69:1
நிச்சயமானது
Verse 2 — Surah Al-Haqqah 69:2
நிச்சயமானது எது
Verse 3 — Surah Al-Haqqah 69:3
அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது
Verse 4 — Surah Al-Haqqah 69:4
ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்
Verse 5 — Surah Al-Haqqah 69:5
எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்
Verse 6 — Surah Al-Haqqah 69:6
இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்
Verse 7 — Surah Al-Haqqah 69:7
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்
Verse 8 — Surah Al-Haqqah 69:8
ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா
Verse 9 — Surah Al-Haqqah 69:9
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்
Verse 10 — Surah Al-Haqqah 69:10
அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்
Verse 11 — Surah Al-Haqqah 69:11
தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்
Verse 12 — Surah Al-Haqqah 69:12
அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்)
Verse 13 — Surah Al-Haqqah 69:13
எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது
Verse 14 — Surah Al-Haqqah 69:14
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால்
Verse 15 — Surah Al-Haqqah 69:15
அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்
Verse 16 — Surah Al-Haqqah 69:16
வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்
Verse 17 — Surah Al-Haqqah 69:17
இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்
Verse 18 — Surah Al-Haqqah 69:18
(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது
Verse 19 — Surah Al-Haqqah 69:19
ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), "இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார்
Verse 20 — Surah Al-Haqqah 69:20
நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்
Verse 21 — Surah Al-Haqqah 69:21
ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில்
Verse 22 — Surah Al-Haqqah 69:22
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்
Verse 23 — Surah Al-Haqqah 69:23
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்
Verse 24 — Surah Al-Haqqah 69:24
சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்" (என அவர்களுக்குக் கூறப்படும்)
Verse 25 — Surah Al-Haqqah 69:25
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; "என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே
Verse 26 — Surah Al-Haqqah 69:26
அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே
Verse 27 — Surah Al-Haqqah 69:27
(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா
Verse 28 — Surah Al-Haqqah 69:28
என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே
Verse 29 — Surah Al-Haqqah 69:29
என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!" (என்று அரற்றுவான்)
Verse 30 — Surah Al-Haqqah 69:30
(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்
Verse 31 — Surah Al-Haqqah 69:31
பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்
Verse 32 — Surah Al-Haqqah 69:32
பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" (என்று உத்தரவிடப்படும்)
Verse 33 — Surah Al-Haqqah 69:33
நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்
Verse 34 — Surah Al-Haqqah 69:34
அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை
Verse 35 — Surah Al-Haqqah 69:35
எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை
Verse 36 — Surah Al-Haqqah 69:36
சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை
Verse 37 — Surah Al-Haqqah 69:37
குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்
Verse 38 — Surah Al-Haqqah 69:38
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்
Verse 39 — Surah Al-Haqqah 69:39
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்)
Verse 40 — Surah Al-Haqqah 69:40
நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்
Verse 41 — Surah Al-Haqqah 69:41
இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்
Verse 42 — Surah Al-Haqqah 69:42
(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்
Verse 43 — Surah Al-Haqqah 69:43
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்
Verse 44 — Surah Al-Haqqah 69:44
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால்
Verse 45 — Surah Al-Haqqah 69:45
அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு
Verse 46 — Surah Al-Haqqah 69:46
பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்
Verse 47 — Surah Al-Haqqah 69:47
அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை
Verse 48 — Surah Al-Haqqah 69:48
ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்
Verse 49 — Surah Al-Haqqah 69:49
ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்
Verse 50 — Surah Al-Haqqah 69:50
அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது
Verse 51 — Surah Al-Haqqah 69:51
மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்
Verse 52 — Surah Al-Haqqah 69:52
ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக