Back to Languages

Tamil - Chapter 77 - Al-Mursalat

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Al-Mursalat 77:1

தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக

Verse 2 — Surah Al-Mursalat 77:2

வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)

Verse 3 — Surah Al-Mursalat 77:3

(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக

Verse 4 — Surah Al-Mursalat 77:4

(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)

Verse 5 — Surah Al-Mursalat 77:5

(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)

Verse 6 — Surah Al-Mursalat 77:6

(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)

Verse 7 — Surah Al-Mursalat 77:7

நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்

Verse 8 — Surah Al-Mursalat 77:8

இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது

Verse 9 — Surah Al-Mursalat 77:9

மேலும், வானம் பிளக்கப்படும் போது

Verse 10 — Surah Al-Mursalat 77:10

அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது

Verse 11 — Surah Al-Mursalat 77:11

மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது

Verse 12 — Surah Al-Mursalat 77:12

எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன

Verse 13 — Surah Al-Mursalat 77:13

தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்

Verse 14 — Surah Al-Mursalat 77:14

மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது

Verse 15 — Surah Al-Mursalat 77:15

(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்

Verse 16 — Surah Al-Mursalat 77:16

முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா

Verse 17 — Surah Al-Mursalat 77:17

பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்

Verse 18 — Surah Al-Mursalat 77:18

குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்)

Verse 19 — Surah Al-Mursalat 77:19

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

Verse 20 — Surah Al-Mursalat 77:20

அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா

Verse 21 — Surah Al-Mursalat 77:21

பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்

Verse 22 — Surah Al-Mursalat 77:22

ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை

Verse 23 — Surah Al-Mursalat 77:23

இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்

Verse 24 — Surah Al-Mursalat 77:24

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்

Verse 25 — Surah Al-Mursalat 77:25

பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா

Verse 26 — Surah Al-Mursalat 77:26

உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது)

Verse 27 — Surah Al-Mursalat 77:27

அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்

Verse 28 — Surah Al-Mursalat 77:28

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்

Verse 29 — Surah Al-Mursalat 77:29

நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்)

Verse 30 — Surah Al-Mursalat 77:30

மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக

Verse 31 — Surah Al-Mursalat 77:31

(அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல

Verse 32 — Surah Al-Mursalat 77:32

நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்

Verse 33 — Surah Al-Mursalat 77:33

நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்

Verse 34 — Surah Al-Mursalat 77:34

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

Verse 35 — Surah Al-Mursalat 77:35

இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்

Verse 36 — Surah Al-Mursalat 77:36

அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்

Verse 37 — Surah Al-Mursalat 77:37

பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

Verse 38 — Surah Al-Mursalat 77:38

இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்)

Verse 39 — Surah Al-Mursalat 77:39

எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்

Verse 40 — Surah Al-Mursalat 77:40

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்

Verse 41 — Surah Al-Mursalat 77:41

நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்

Verse 42 — Surah Al-Mursalat 77:42

இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு

Verse 43 — Surah Al-Mursalat 77:43

நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்)

Verse 44 — Surah Al-Mursalat 77:44

நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்

Verse 45 — Surah Al-Mursalat 77:45

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

Verse 46 — Surah Al-Mursalat 77:46

(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே

Verse 47 — Surah Al-Mursalat 77:47

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

Verse 48 — Surah Al-Mursalat 77:48

நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்

Verse 49 — Surah Al-Mursalat 77:49

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்

Verse 50 — Surah Al-Mursalat 77:50

எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்