Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 92 - Al-Layl
Translation by Jan Turst Foundation — Permalink
Verse 1 — Surah Al-Layl 92:1
(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக
Verse 2 — Surah Al-Layl 92:2
பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக
Verse 3 — Surah Al-Layl 92:3
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக
Verse 4 — Surah Al-Layl 92:4
நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்
Verse 5 — Surah Al-Layl 92:5
எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து
Verse 6 — Surah Al-Layl 92:6
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ
Verse 7 — Surah Al-Layl 92:7
அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்
Verse 8 — Surah Al-Layl 92:8
ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ
Verse 9 — Surah Al-Layl 92:9
இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ
Verse 10 — Surah Al-Layl 92:10
அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்
Verse 11 — Surah Al-Layl 92:11
ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது
Verse 12 — Surah Al-Layl 92:12
நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது
Verse 13 — Surah Al-Layl 92:13
அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்
Verse 14 — Surah Al-Layl 92:14
ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்
Verse 15 — Surah Al-Layl 92:15
மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்
Verse 16 — Surah Al-Layl 92:16
எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்
Verse 17 — Surah Al-Layl 92:17
ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்
Verse 18 — Surah Al-Layl 92:18
(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்
Verse 19 — Surah Al-Layl 92:19
மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்
Verse 20 — Surah Al-Layl 92:20
மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்)
Verse 21 — Surah Al-Layl 92:21
வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்