Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 69 - Al-Haqqah
Translation by Abdulhameed Baqavi — Permalink
Verse 1 — Surah Al-Haqqah 69:1
(நிகழக்கூடிய) உண்மை(ச் சம்பவம்)
Verse 2 — Surah Al-Haqqah 69:2
அந்த உண்மை(ச் சம்பவம்) எது
Verse 3 — Surah Al-Haqqah 69:3
(நபியே!) அந்த உண்மை(ச் சம்பவம்) என்னவென்பதை நீர் அறிவீரா
Verse 4 — Surah Al-Haqqah 69:4
‘ஸமூத்' என்னும் மக்களும் ‘ஆத்' என்னும் மக்களும் (மரணித்தவர்களைத்) தட்டி எழுப்பு(ம் அச்சம்ப)வ(த்)தைப் பொய்யாக்கினர்
Verse 5 — Surah Al-Haqqah 69:5
ஆகவே, ‘ஸமூத்' மக்கள் பெரும் சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டனர்
Verse 6 — Surah Al-Haqqah 69:6
ஆத் என்னும் மக்களோ, அதிவேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக்கொண்டு அழிக்கப்பட்டனர்
Verse 7 — Surah Al-Haqqah 69:7
ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அக்காற்றை நடத்தி வைத்தான். (நபியே! அச்சமயம் நீர் அங்கிருந்தால்) வேரற்று சாய்ந்த ஈச்சமரங்களைப் போல், அந்த மக்கள் பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டிருப்பீர்
Verse 8 — Surah Al-Haqqah 69:8
(இன்றைக்கும்) அவர்களில் எவரும் தப்பி(ப் பிழைத்து) இருப்பதை நீர் காண்கிறீரா
Verse 9 — Surah Al-Haqqah 69:9
ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும் தலைகீழாகப் புறட்டப்பட்ட ஊரிலிருந்த (லூத்துடைய) மக்களும் (அந்த உண்மையான சம்பவத்தை நிராகரித்துப்) பாவம் செய்துகொண்டே வந்தார்கள்
Verse 10 — Surah Al-Haqqah 69:10
இன்னும் அவர்கள், தங்கள் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர். ஆதலால், அவன் அவர்களை மிக்க பலமாகப் பிடித்துக்கொண்டான்
Verse 11 — Surah Al-Haqqah 69:11
(நூஹ் நபி காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில்) தண்ணீர் பெருக்கெடுத்தபோது, நிச்சயமாக நாம் உங்(கள் மூதாதை)களைக் கப்பலில் ஏற்றி (காப்பாற்றி)க் கொண்டோம்
Verse 12 — Surah Al-Haqqah 69:12
அதை உங்களுக்கு ஒரு படிப்பினையாகச் செய்வதற்கும், அதைக் காதால் கேட்பவன் ஞாபகத்தில் வைப்பதற்கும் (அவ்வாறு செய்தோம்)
Verse 13 — Surah Al-Haqqah 69:13
(பலமாக) ஒரு முறை ஸூர் ஊதப்பட்டு
Verse 14 — Surah Al-Haqqah 69:14
பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) ஒன்றோடொன்று மோதி பலமாக அடிக்கப்பட்டால்
Verse 15 — Surah Al-Haqqah 69:15
அந்நாளில்தான் யுகமுடிவின் மாபெரும் சம்பவம் நிகழும்
Verse 16 — Surah Al-Haqqah 69:16
அந்நாளில் வானம் வெடித்து, அது பலவீனமாகி விடும்
Verse 17 — Surah Al-Haqqah 69:17
(நபியே!) வானவர்கள் அதன் கோடிகளிலிருப்பார்கள். மேலும், அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை, எட்டு வானவர்கள் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள்
Verse 18 — Surah Al-Haqqah 69:18
(மனிதர்களே!) அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள். மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது
Verse 19 — Surah Al-Haqqah 69:19
எவருடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவருடைய வலது கையில் கொடுக்கப்படுகிறாரோ அவர் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்)கூறுவார்: ‘‘இதோ! என் ஏடு; இதை நீங்கள் படித்துப் பாருங்கள்
Verse 20 — Surah Al-Haqqah 69:20
நிச்சயமாக நான் என் கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்
Verse 21 — Surah Al-Haqqah 69:21
ஆகவே, அவர் திருப்தியான (சுகபோக) வாழ்க்கையில்
Verse 22 — Surah Al-Haqqah 69:22
மேலான சொர்க்கத்தில் இருப்பார்
Verse 23 — Surah Al-Haqqah 69:23
அதன் கனிகள் (இவர்கள், படுத்திருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும், எந்நிலைமையிலும் கைக்கு எட்டக்கூடியதாக இவர்களை) நெருங்கி இருக்கும்
Verse 24 — Surah Al-Haqqah 69:24
(இவர்களை நோக்கி) ‘‘சென்ற நாள்களில் நீங்கள் சேகரித்து வைத்திருந்த (நன்மையான)வற்றின் காரணமாக, மிக்க தாராளமாக இவற்றைப் புசியுங்கள்! அருந்துங்கள்'' (என்று கூறப்படும்)
Verse 25 — Surah Al-Haqqah 69:25
எவனுடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ‘‘என் ஏடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டாமா? என்று கூறுவான்
Verse 26 — Surah Al-Haqqah 69:26
மேலும், என் கணக்கை இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டுமே
Verse 27 — Surah Al-Haqqah 69:27
நான் இறந்தபொழுதே என் காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டுமே
Verse 28 — Surah Al-Haqqah 69:28
என் பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே
Verse 29 — Surah Al-Haqqah 69:29
என் அரசாட்சியும் அழிந்துவிட்டதே!'' (என்றும் புலம்புவான்)
Verse 30 — Surah Al-Haqqah 69:30
(பின்னர் நாம்) ‘‘அவனைப் பிடியுங்கள், அவனுக்கு விலங்கிடுங்கள்
Verse 31 — Surah Al-Haqqah 69:31
அவனை நரகத்தில் தள்ளுங்கள் என்றும்
Verse 32 — Surah Al-Haqqah 69:32
எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்'' என்றும் (கூறுவோம்)
Verse 33 — Surah Al-Haqqah 69:33
நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வையே நம்பிக்கை கொள்ளவில்லை
Verse 34 — Surah Al-Haqqah 69:34
ஏழைகளுக்கு (தானும் உணவளிக்காததுடன், பிறரையும்) உணவளிக்கும்படி அவன் தூண்டவில்லை
Verse 35 — Surah Al-Haqqah 69:35
‘‘ஆகவே, இன்று அவனுக்கு (இங்கு) ஒரு நண்பனும் இல்லை
Verse 36 — Surah Al-Haqqah 69:36
(புண்களில் வடியும்) சீழ் சலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவில்லை'' (என்றும் கூறப்படும்)
Verse 37 — Surah Al-Haqqah 69:37
அதைக் குற்றவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உண்ண மாட்டார்கள்
Verse 38 — Surah Al-Haqqah 69:38
(மக்களே!) நீங்கள் பார்ப்பவற்றின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றுபவற்றின் மீதும்)
Verse 39 — Surah Al-Haqqah 69:39
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றாதவற்றின் மீதும்) சத்தியமாக
Verse 40 — Surah Al-Haqqah 69:40
இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடியே) மிக்க கண்ணியமான ஒரு தூதரால் கூறப்பட்டதாகும்
Verse 41 — Surah Al-Haqqah 69:41
இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்
Verse 42 — Surah Al-Haqqah 69:42
(இது) ஒரு குறிகாரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்
Verse 43 — Surah Al-Haqqah 69:43
அகிலத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது
Verse 44 — Surah Al-Haqqah 69:44
ஒரு சில வார்த்தைகளை அவர் நம்மீது கற்பனை செய்து பொய்யாகக் கூறினாலும்
Verse 45 — Surah Al-Haqqah 69:45
அவருடைய வலது கரத்தை நாம் (பலமாகப்) பிடித்துக் கொண்டு
Verse 46 — Surah Al-Haqqah 69:46
பிறகு, அவருடைய உயிர் நாடியை நாம் தறித்து விடுவோம்
Verse 47 — Surah Al-Haqqah 69:47
உங்களில் எவருமே அவரை விட்டும் அதைத் தடுத்துவிட முடியாது
Verse 48 — Surah Al-Haqqah 69:48
நிச்சயமாக இது இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவே இருக்கிறது
Verse 49 — Surah Al-Haqqah 69:49
(எனினும்,) உங்களில் அதைப் பொய்யாக்குகிறவர்களும் இருக்கின்றனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்
Verse 50 — Surah Al-Haqqah 69:50
நிச்சயமாக அது நிராகரிப்பவர்களுக்குத் துக்கத்தைத் தரக்கூடியதாகவே இருக்கிறது
Verse 51 — Surah Al-Haqqah 69:51
(எனினும்) நிச்சயமாக இது, ஒரு சிறிதும் சந்தேகமற்ற உண்மையாகும்
Verse 52 — Surah Al-Haqqah 69:52
ஆகவே, (நபியே!) நீர் மகத்தான உமது இறைவனின் திருப்பெயரை துதிசெய்து கொண்டிருப்பீராக