Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 70 - Al-Maarij
Translation by Abdulhameed Baqavi — Permalink
Verse 1 — Surah Al-Maarij 70:1
(நபியே! நிராகரிப்பவர்களுக்குச்) சம்பவிக்கக்கூடிய வேதனையைப் பற்றி கேட்பவன் ஒருவன் (உம்மிடம் அது) எப்பொழுது வருமென(ப் பரிகாசமாக)க் கேட்கிறான்
Verse 2 — Surah Al-Maarij 70:2
நிராகரிப்பவர்களுக்கு (அது சம்பவிக்கும் சமயத்தில்) அதைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை
Verse 3 — Surah Al-Maarij 70:3
உயர்ப் பாதைகளையுடைய அல்லாஹ்வினால் (அது சம்பவிக்கும்)
Verse 4 — Surah Al-Maarij 70:4
அந்நாளில் வானவர்களும், ஜிப்ரயீலும் அவனிடம் போய்ச் சேருவார்கள். (அந்நாள்) ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமாக இருக்கும்
Verse 5 — Surah Al-Maarij 70:5
(நபியே!) நீர் நேர்த்தியான சாந்தத்தோடு பொறுத்திருப்பீராக
Verse 6 — Surah Al-Maarij 70:6
(எனினும்,) நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாக எண்ணுகின்றனர்
Verse 7 — Surah Al-Maarij 70:7
நாமோ அதை வெகு சமீபமாகக் காண்கிறோம்
Verse 8 — Surah Al-Maarij 70:8
அந்நாளில் வானம் பழுக்கக் காய்ந்த செம்பைப்போல் ஆகிவிடும்
Verse 9 — Surah Al-Maarij 70:9
மலைகள் பஞ்சைப் போல் ஆகி (பறந்து) விடும்
Verse 10 — Surah Al-Maarij 70:10
ஒரு நண்பன் மற்றொரு நண்பனை(ப் பார்த்த போதிலும் அவனுடைய சுகத்தை) விசாரிக்க மாட்டான்
Verse 11 — Surah Al-Maarij 70:11
அவர்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கொள்வார்கள். குற்றவாளி, அந்நாளில் தன் வேதனைக்குப் பரிகாரமாகத் தன் பிள்ளைகளையும்
Verse 12 — Surah Al-Maarij 70:12
தன் மனைவிகளையும், தன் சகோதரனையும்
Verse 13 — Surah Al-Maarij 70:13
தன்னை ஆதரித்து வந்த தன் சொந்தக்காரர்களையும்
Verse 14 — Surah Al-Maarij 70:14
இன்னும், பூமியிலுள்ள அனைத்தையுமே கொடுத்தேனும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப் பிரியப்படுவான்
Verse 15 — Surah Al-Maarij 70:15
(எனினும்) அது ஆகக்கூடியதல்ல. நிச்சயமாக அது நரகத்தின் நெருப்பு. (இவனைச் சூழ்ந்து கொள்ளும்)
Verse 16 — Surah Al-Maarij 70:16
அது தோல்களை எரித்து (மூளையை உருக்கி) விடும்
Verse 17 — Surah Al-Maarij 70:17
புறம்காட்டிச் சென்று புறக்கணித்தவர்களை எல்லாம் அது அழைக்கும்
Verse 18 — Surah Al-Maarij 70:18
(பொருளைச்) சேகரித்து(ச் செலவு செய்யாது) பத்திரப்படுத்தி வைத்திருந்தவர்களையும் (தன்னிடம் அழைக்கும்)
Verse 19 — Surah Al-Maarij 70:19
மெய்யாகவே மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான்
Verse 20 — Surah Al-Maarij 70:20
ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால், (திடுக்கிட்டு) நடுங்குகிறான்
Verse 21 — Surah Al-Maarij 70:21
அவனை ஒரு நன்மை அடைந்தாலோ, அதை (தர்மம் செய்யாது) தடுத்துக் கொள்கிறான்
Verse 22 — Surah Al-Maarij 70:22
ஆயினும், தொழுகையாளிகளைத் தவிர
Verse 23 — Surah Al-Maarij 70:23
அவர்கள் தங்கள் தொழுகையைத் தவறாது தொழுது வருவார்கள்
Verse 24 — Surah Al-Maarij 70:24
அவர்களுடைய பொருள்களில் (ஏழைகளுக்குக்) குறிப்பிட்ட பங்கு உண்டு
Verse 25 — Surah Al-Maarij 70:25
அதைக் கேட்பவர்களுக்கும் (வெட்கத்தால் கேட்காத) வரியவர்களுக்கும் (கொடுப்பார்கள்)
Verse 26 — Surah Al-Maarij 70:26
கூலி கொடுக்கும் நாளையும் அவர்கள் உண்மை என்றே நம்புகின்றனர்
Verse 27 — Surah Al-Maarij 70:27
(இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்கள் இறைவனின் வேதனைக்குப் பயந்து கொண்டே இருப்பார்கள்
Verse 28 — Surah Al-Maarij 70:28
(ஏனென்றால்,) நிச்சயமாகத் தங்கள் இறைவனின் வேதனை அச்சமற்றிருக்கக் கூடியதல்ல
Verse 29 — Surah Al-Maarij 70:29
அவர்கள், தங்கள் மர்மஸ்தானத்தையும் பாதுகாத்துக் கொள்வார்கள்
Verse 30 — Surah Al-Maarij 70:30
ஆயினும், தங்கள் மனைவிகளிடத்திலும், தங்கள் அடிமைப் பெண்களிடத்திலும் தவிர. நிச்சயமாக அவர்கள் (இவர்களுடன் சம்பந்தப்படுவதைப் பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்
Verse 31 — Surah Al-Maarij 70:31
இதைத்தவிர (மற்றெதையும்) எவரேனும் விரும்பினால், அத்தகையவர்கள் வரம்பு மீறியவர்களாவார்கள்
Verse 32 — Surah Al-Maarij 70:32
இன்னும், எவர்கள், தங்களிடம் (நம்பி) ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருள்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணி, (யோக்கியமாக நடந்து) கொள்கிறார்களோ அவர்களும்
Verse 33 — Surah Al-Maarij 70:33
இன்னும், எவர்கள், தங்கள் சாட்சியத்தில் (தவறிழைக்காது) உறுதியாக இருக்கிறார்களோ அவர்களும்
Verse 34 — Surah Al-Maarij 70:34
இன்னும், எவர்கள் தொழுகையையும் கவனித்து(த் தவறாது) ஒழுங்காகத் தொழுது வருகிறார்களோ அவர்களும்
Verse 35 — Surah Al-Maarij 70:35
ஆகிய இவர்கள்தான் சொர்க்கத்தில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்
Verse 36 — Surah Al-Maarij 70:36
(நபியே!) இந்நிராகரிப்பவர்களுக்கு என்ன சுதந்திரம்? (அவர்கள்) உமக்கு முன் ஓடி வருகின்றனர்
Verse 37 — Surah Al-Maarij 70:37
வலது புறமிருந்தும், இடது புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக (ஓடி வருகின்றனர்)
Verse 38 — Surah Al-Maarij 70:38
அவர்களில் ஒவ்வொருவரும் இன்பம் தரும் சொர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று ஆசைப்படுகின்றனரா
Verse 39 — Surah Al-Maarij 70:39
அது ஆகப்போவதில்லை. அவர்கள் அறிந்த ஓர் (அற்ப) வஸ்துவிலிருந்தே நாம் அவர்களைப் படைத்திருக்கிறோம்
Verse 40 — Surah Al-Maarij 70:40
கிழக்கு மற்றும் மேற்குத் திசையின் இறைவன்மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் (நம் விருப்பப்படி செய்ய) ஆற்றலுடையோம்
Verse 41 — Surah Al-Maarij 70:41
(இவர்களை நீக்கி) இவர்களைவிட மேலானவர்களை மாற்றிவிடவும் (ஆற்றலுடையோம்!) இதில் நாம் இயலாதவர்களல்ல
Verse 42 — Surah Al-Maarij 70:42
ஆகவே, (நபியே!) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளை அவர்கள் சந்திக்கும் வரை, அவர்கள் விளையாடிக்கொண்டும், (வீண் காரியங்களில்) ஆழ்ந்து கிடக்குமாறும் அவர்களை நீர் விட்டுவிடுவீராக
Verse 43 — Surah Al-Maarij 70:43
(நபியே!) அவர்களுக்கு ஒரு நாளை நீர் ஞாபகமூட்டுவீராக. (சிலை வணங்குபவர்கள் தங்கள் திருநாள்களில் பூஜைக்காக நட்டுவைக்கப்பட்ட) கொடிகளின் பக்கம் விரைந்தோடுவதைப் போலவே, சமாதிகளிலிருந்து வெளிப்பட்டு (ஹஷ்ருடைய மைதானத்திற்கு) வெகு தீவிரமாகச் செல்வார்கள்
Verse 44 — Surah Al-Maarij 70:44
(அந்நாளில்) பயந்த பார்வையுடன் ஓடுவார்கள். இழிவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். (நபியே!) இந்நாள்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்