Back to Languages

Tamil - Chapter 85 - Al-Buruj

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 1 — Surah Al-Buruj 85:1

கோள்கள் நிறைந்த வானத்தின் மீது சத்தியமாக

Verse 2 — Surah Al-Buruj 85:2

வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாள் மீது சத்தியமாக

Verse 3 — Surah Al-Buruj 85:3

சாட்சியின் மீதும், சாட்சி சொல்ல வேண்டிய நாளின் மீதும் சத்தியமாக

Verse 4 — Surah Al-Buruj 85:4

அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்)

Verse 5 — Surah Al-Buruj 85:5

அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்)

Verse 6 — Surah Al-Buruj 85:6

அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில்

Verse 7 — Surah Al-Buruj 85:7

நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள்

Verse 8 — Surah Al-Buruj 85:8

(நம்பிக்கை கொண்ட) அவர்களில் ஒரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர்

Verse 9 — Surah Al-Buruj 85:9

வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (அவனை நம்பிக்கை கொண்டதற்காகவே அந்த பாவிகள் அவர்களை நெருப்பில் எறிந்தனர்.) அல்லாஹ்வோ, (இவர்கள் செய்த) அனைத்திற்கும் சாட்சி ஆவான்

Verse 10 — Surah Al-Buruj 85:10

ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்தி பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. மேலும், (அவர்கள் நம்பிக்கையாளர்களை நெருப்பிட்டவாறு) அவர்களுக்கும் பொசுக்குகின்ற வேதனையுண்டு

Verse 11 — Surah Al-Buruj 85:11

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ நிச்சயமாக அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களுண்டு. இதுதான் மாபெரும் வெற்றி

Verse 12 — Surah Al-Buruj 85:12

(நபியே! இந்த விஷமிகளைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்) நிச்சயமாக உமது இறைவனின் பிடி மிக்க கடுமையானது. (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது)

Verse 13 — Surah Al-Buruj 85:13

நிச்சயமாக அவன்தான் (அவர்களை) உற்பத்தி செய்கிறான். (அவர்கள் மரணித்த பின்னரும்) அவர்களை மீளவைப்பான்

Verse 14 — Surah Al-Buruj 85:14

அவன்தான் (நம்பிக்கை கொண்டவர்களை) மிக்க மன்னிப்பவனும், மிக நேசிப்பவனும் ஆவான்

Verse 15 — Surah Al-Buruj 85:15

(அவன்தான்) அர்ஷுடையவன், மகா கீர்த்தியுடையவன்

Verse 16 — Surah Al-Buruj 85:16

தான் விரும்பியதையெல்லாம் செய்யக் கூடியவன்

Verse 17 — Surah Al-Buruj 85:17

(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு எட்டியதா? (யாருடைய படைகள்)

Verse 18 — Surah Al-Buruj 85:18

ஃபிர்அவ்ன், ஸமூதுடைய (படைகள்)

Verse 19 — Surah Al-Buruj 85:19

எனினும், இந்நிராகரிப்பவர்கள் (குர்ஆனைப்) பொய்யாக்குவதிலேயே (முனைந்து) கிடக்கின்றனர்

Verse 20 — Surah Al-Buruj 85:20

அல்லாஹ்வோ, அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறான்

Verse 21 — Surah Al-Buruj 85:21

(இது கவியல்ல.) மாறாக, இது கீர்த்திமிக்க குர்ஆன்

Verse 22 — Surah Al-Buruj 85:22

(இது) லவ்ஹுல் மஹ்பூளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அதை இவர்கள் நிராகரிப்பதனால் ஆகக்கூடியதென்ன)