Back to Languages

Tamil - Chapter 86 - At-Tariq

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 1 — Surah At-Tariq 86:1

வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக

Verse 2 — Surah At-Tariq 86:2

(நபியே!) உதயமாகக்கூடியது என்னவென்று நீர் அறிவீரா

Verse 3 — Surah At-Tariq 86:3

(இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற நட்சத்திரம்

Verse 4 — Surah At-Tariq 86:4

ஒவ்வொரு மனிதனிடமும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) கண்காணிக்கக் கூடிய ஒரு (வான)வர் இல்லாமலில்லை

Verse 5 — Surah At-Tariq 86:5

ஆகவே, மனிதன், தான் எதனால் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை கவனிக்கவும்

Verse 6 — Surah At-Tariq 86:6

குதித்து வெளிப்படும் ஒரு துளித் தண்ணீரைக் கொண்டே படைக்கப்பட்டான்

Verse 7 — Surah At-Tariq 86:7

அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது

Verse 8 — Surah At-Tariq 86:8

(இவ்வாறு படைக்கின்ற) அவன் (மனிதன் இறந்தபின் உயிர் கொடுத்து) அவனை மீளவைக்கவும் நிச்சயமாக ஆற்றலுடையவன்ன

Verse 9 — Surah At-Tariq 86:9

என்றைய தினம் எல்லா மர்மங்களும் வெளிப்பட்டுவிடுமோ

Verse 10 — Surah At-Tariq 86:10

(அன்றைய தினம்) மனிதனுக்கு ஒரு சக்தியும் இருக்காது. உதவி செய்பவனும் இருக்க மாட்டான்

Verse 11 — Surah At-Tariq 86:11

மழை பொழியும் வானத்தின் மீது சத்தியமாக

Verse 12 — Surah At-Tariq 86:12

(புற்பூண்டுகள் முளைக்க) வெடிக்கும் பூமியின் மீதும் சத்தியமாக

Verse 13 — Surah At-Tariq 86:13

மெய்யாகவே இது (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக்கூடிய சொல்லாகும்

Verse 14 — Surah At-Tariq 86:14

இது வீண் பரிகாசமா(ன வார்த்தைய)ல்ல

Verse 15 — Surah At-Tariq 86:15

(நபியே!) நிச்சயமாக அவர்கள் (உமக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள்

Verse 16 — Surah At-Tariq 86:16

நானும் (அவர்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்வேன்

Verse 17 — Surah At-Tariq 86:17

ஆகவே, இந்நிராகரிப்பவர்களுக்கு (அது வரை) நீர் அவகாசமளிப்பீராக. (அதிகமல்ல;) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளிப்பீராக