Back to Languages

Tamil - Chapter 87 - Al-Ala

Translation by Abdulhameed Baqavi — Permalink

Verse 1 — Surah Al-Ala 87:1

(நபியே!) மிக மேலான உமது இறைவனின் திருப்பெயரை நீர் புகழ்ந்து துதி செய்வீராக

Verse 2 — Surah Al-Ala 87:2

அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, (அவற்றை) ஒழுங்குபடுத்தியவன்

Verse 3 — Surah Al-Ala 87:3

அவனே (அவற்றுக்கு வேண்டிய சகலவற்றையும்) நிர்ணயம் செய்து, (அவற்றை அடையக் கூடிய) வழிகளையும் (அவற்றுக்கு) அறிவித்தான்

Verse 4 — Surah Al-Ala 87:4

அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சல் பொருள்களையும் வெளிப்படுத்துகிறான்

Verse 5 — Surah Al-Ala 87:5

பின்னர் அவற்றை உலர்ந்த சருகுகளாக ஆக்குகிறான்

Verse 6 — Surah Al-Ala 87:6

(நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்

Verse 7 — Surah Al-Ala 87:7

(நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்

Verse 8 — Surah Al-Ala 87:8

சொர்க்கப் பாதையை நாம் உமக்கு எளிதாக்கித் தருவோம்

Verse 9 — Surah Al-Ala 87:9

ஆகவே, நல்லுபதேசம் (மக்களுக்குப்) பயனளிக்கின்ற வரை நீர் உபதேசித்துக் கொண்டே வருவீராக

Verse 10 — Surah Al-Ala 87:10

நிச்சயமாக எவர் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ அவர், (இதைக் கொண்டு) நல்லறிவை அடைவார்

Verse 11 — Surah Al-Ala 87:11

துர்ப்பாக்கியமுடையவனோ, இதிலிருந்து விலகிக்கொள்வான்

Verse 12 — Surah Al-Ala 87:12

(எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை அடைவான்

Verse 13 — Surah Al-Ala 87:13

பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான்

Verse 14 — Surah Al-Ala 87:14

எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார்

Verse 15 — Surah Al-Ala 87:15

அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார்

Verse 16 — Surah Al-Ala 87:16

எனினும், நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்

Verse 17 — Surah Al-Ala 87:17

மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்

Verse 18 — Surah Al-Ala 87:18

நிச்சயமாக இது முன்னுள்ள வேதங்களிலும்

Verse 19 — Surah Al-Ala 87:19

இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் இருக்கிறது