Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 89 - Al-Fajr
Translation by Abdulhameed Baqavi — Permalink
Verse 1 — Surah Al-Fajr 89:1
விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக
Verse 2 — Surah Al-Fajr 89:2
விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக
Verse 3 — Surah Al-Fajr 89:3
ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக
Verse 4 — Surah Al-Fajr 89:4
நிகழ்கின்ற இரவின் மீது சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்)
Verse 5 — Surah Al-Fajr 89:5
இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கிறது
Verse 6 — Surah Al-Fajr 89:6
(நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா
Verse 7 — Surah Al-Fajr 89:7
(நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா
Verse 8 — Surah Al-Fajr 89:8
அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை
Verse 9 — Surah Al-Fajr 89:9
இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்
Verse 10 — Surah Al-Fajr 89:10
இன்னும், (இராணுவங்களையுடைய) ஆணிக்கார ஃபிர்அவ்னை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்க வில்லையா)
Verse 11 — Surah Al-Fajr 89:11
இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்
Verse 12 — Surah Al-Fajr 89:12
(பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்
Verse 13 — Surah Al-Fajr 89:13
ஆதலால், உங்கள் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக்கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்
Verse 14 — Surah Al-Fajr 89:14
நிச்சயமாக உமது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கிறான்
Verse 15 — Surah Al-Fajr 89:15
ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான்
Verse 16 — Surah Al-Fajr 89:16
ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான்
Verse 17 — Surah Al-Fajr 89:17
(விஷயம்) அவ்வாறல்ல. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை
Verse 18 — Surah Al-Fajr 89:18
ஏழைகளுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும் நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை
Verse 19 — Surah Al-Fajr 89:19
பிறருடைய சொத்துக்களை உங்கள் சொத்துடன் சேர்த்து புசித்துவிடுகிறீர்கள்
Verse 20 — Surah Al-Fajr 89:20
மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள்
Verse 21 — Surah Al-Fajr 89:21
அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்
Verse 22 — Surah Al-Fajr 89:22
உமது இறைவனும் வருவான். வானவர்களும் அணிஅணியாக வருவார்கள்
Verse 23 — Surah Al-Fajr 89:23
அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டுவரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அப்போது (உதயமாகின்ற) அறிவால் அவனுக்கு என்ன பயன்
Verse 24 — Surah Al-Fajr 89:24
‘‘என் வாழ்க்கையில் நான் (ஒரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டுமே!'' என்று புலம்புவான்
Verse 25 — Surah Al-Fajr 89:25
அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்)
Verse 26 — Surah Al-Fajr 89:26
(பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்)
Verse 27 — Surah Al-Fajr 89:27
(எனினும், அந்நாளில் நல்ல மனிதனை நோக்கி) “நிம்மதிபெற்ற ஆத்மாவே
Verse 28 — Surah Al-Fajr 89:28
நீ (இறைவனைக் கொண்டு) திருப்தியடைந்ததாக! (இறைவனால் நீ) திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பச் செல்!'' (என்றும்)
Verse 29 — Surah Al-Fajr 89:29
‘‘நீ என் நல்லடியார்களில் சேர்ந்து
Verse 30 — Surah Al-Fajr 89:30
என் சொர்க்கத்திலும் நீ நுழைந்துவிடு'' (என்றும் கூறுவான்)