Back to Languages

Tamil - Chapter 80 - Abasa

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Abasa 80:1

அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்

Verse 2 — Surah Abasa 80:2

அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது

Verse 3 — Surah Abasa 80:3

(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா

Verse 4 — Surah Abasa 80:4

அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்

Verse 5 — Surah Abasa 80:5

(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ

Verse 6 — Surah Abasa 80:6

நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்

Verse 7 — Surah Abasa 80:7

ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை

Verse 8 — Surah Abasa 80:8

ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ

Verse 9 — Surah Abasa 80:9

அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக

Verse 10 — Surah Abasa 80:10

அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்

Verse 11 — Surah Abasa 80:11

அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்

Verse 12 — Surah Abasa 80:12

எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்

Verse 13 — Surah Abasa 80:13

(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது

Verse 14 — Surah Abasa 80:14

உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது

Verse 15 — Surah Abasa 80:15

(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்

Verse 16 — Surah Abasa 80:16

(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்

Verse 17 — Surah Abasa 80:17

(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்

Verse 18 — Surah Abasa 80:18

எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா)

Verse 19 — Surah Abasa 80:19

(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்

Verse 20 — Surah Abasa 80:20

பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்

Verse 21 — Surah Abasa 80:21

பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்

Verse 22 — Surah Abasa 80:22

பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்

Verse 23 — Surah Abasa 80:23

(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை

Verse 24 — Surah Abasa 80:24

எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்

Verse 25 — Surah Abasa 80:25

நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்

Verse 26 — Surah Abasa 80:26

பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து

Verse 27 — Surah Abasa 80:27

பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்

Verse 28 — Surah Abasa 80:28

திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்

Verse 29 — Surah Abasa 80:29

ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும்

Verse 30 — Surah Abasa 80:30

அடர்ந்த தோட்டங்களையும்

Verse 31 — Surah Abasa 80:31

பழங்களையும், தீவனங்களையும்

Verse 32 — Surah Abasa 80:32

(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக

Verse 33 — Surah Abasa 80:33

ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது)

Verse 34 — Surah Abasa 80:34

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும்

Verse 35 — Surah Abasa 80:35

தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்

Verse 36 — Surah Abasa 80:36

தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்

Verse 37 — Surah Abasa 80:37

அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்

Verse 38 — Surah Abasa 80:38

அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்

Verse 39 — Surah Abasa 80:39

சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்

Verse 40 — Surah Abasa 80:40

ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்

Verse 41 — Surah Abasa 80:41

அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்

Verse 42 — Surah Abasa 80:42

அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்