Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 81 - At-Takwir
Translation by Jan Turst Foundation — Permalink
Verse 1 — Surah At-Takwir 81:1
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
Verse 2 — Surah At-Takwir 81:2
நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது
Verse 3 — Surah At-Takwir 81:3
மலைகள் பெயர்க்கப்படும் போது
Verse 4 — Surah At-Takwir 81:4
சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது
Verse 5 — Surah At-Takwir 81:5
காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது
Verse 6 — Surah At-Takwir 81:6
கடல்கள் தீ மூட்டப்படும்போது
Verse 7 — Surah At-Takwir 81:7
உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது
Verse 8 — Surah At-Takwir 81:8
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது
Verse 9 — Surah At-Takwir 81:9
எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று
Verse 10 — Surah At-Takwir 81:10
பட்டோலைகள் விரிக்கப்படும் போது
Verse 11 — Surah At-Takwir 81:11
வானம் அகற்றப்படும் போது
Verse 12 — Surah At-Takwir 81:12
நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது
Verse 13 — Surah At-Takwir 81:13
சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது
Verse 14 — Surah At-Takwir 81:14
ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்
Verse 15 — Surah At-Takwir 81:15
எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக
Verse 16 — Surah At-Takwir 81:16
முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்)
Verse 17 — Surah At-Takwir 81:17
பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்
Verse 18 — Surah At-Takwir 81:18
மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக
Verse 19 — Surah At-Takwir 81:19
நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்
Verse 20 — Surah At-Takwir 81:20
(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்
Verse 21 — Surah At-Takwir 81:21
(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்
Verse 22 — Surah At-Takwir 81:22
மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்
Verse 23 — Surah At-Takwir 81:23
அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்
Verse 24 — Surah At-Takwir 81:24
மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்
Verse 25 — Surah At-Takwir 81:25
அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல
Verse 26 — Surah At-Takwir 81:26
எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்
Verse 27 — Surah At-Takwir 81:27
இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்
Verse 28 — Surah At-Takwir 81:28
உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்)
Verse 29 — Surah At-Takwir 81:29
ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்