Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 86 - At-Tariq
Translation by Jan Turst Foundation — Permalink
Verse 1 — Surah At-Tariq 86:1
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
Verse 2 — Surah At-Tariq 86:2
தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது
Verse 3 — Surah At-Tariq 86:3
அது இலங்கும் ஒரு நட்சத்திரம்
Verse 4 — Surah At-Tariq 86:4
ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை
Verse 5 — Surah At-Tariq 86:5
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்
Verse 6 — Surah At-Tariq 86:6
குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்
Verse 7 — Surah At-Tariq 86:7
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது
Verse 8 — Surah At-Tariq 86:8
இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்
Verse 9 — Surah At-Tariq 86:9
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்
Verse 10 — Surah At-Tariq 86:10
மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை
Verse 11 — Surah At-Tariq 86:11
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக
Verse 12 — Surah At-Tariq 86:12
(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக
Verse 13 — Surah At-Tariq 86:13
நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்
Verse 14 — Surah At-Tariq 86:14
அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல
Verse 15 — Surah At-Tariq 86:15
நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்
Verse 16 — Surah At-Tariq 86:16
நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்
Verse 17 — Surah At-Tariq 86:17
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக