Back to Languages

Tamil - Chapter 93 - Ad-Duhaa

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Ad-Duhaa 93:1

முற்பகல் மீது சத்தியமாக

Verse 2 — Surah Ad-Duhaa 93:2

ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக

Verse 3 — Surah Ad-Duhaa 93:3

உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை

Verse 4 — Surah Ad-Duhaa 93:4

மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்

Verse 5 — Surah Ad-Duhaa 93:5

இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்

Verse 6 — Surah Ad-Duhaa 93:6

(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா

Verse 7 — Surah Ad-Duhaa 93:7

இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்

Verse 8 — Surah Ad-Duhaa 93:8

மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்

Verse 9 — Surah Ad-Duhaa 93:9

எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்

Verse 10 — Surah Ad-Duhaa 93:10

யாசிப்போரை விரட்டாதீர்

Verse 11 — Surah Ad-Duhaa 93:11

மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக