Back to Languages

Tamil - Chapter 97 - Al-Qadr

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Al-Qadr 97:1

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்

Verse 2 — Surah Al-Qadr 97:2

மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது

Verse 3 — Surah Al-Qadr 97:3

கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்

Verse 4 — Surah Al-Qadr 97:4

அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்

Verse 5 — Surah Al-Qadr 97:5

சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்