Back to Languages

Tamil - Chapter 99 - Az-Zalzalah

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Az-Zalzalah 99:1

பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது

Verse 2 — Surah Az-Zalzalah 99:2

இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது

Verse 3 — Surah Az-Zalzalah 99:3

அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது

Verse 4 — Surah Az-Zalzalah 99:4

அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்

Verse 5 — Surah Az-Zalzalah 99:5

(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்

Verse 6 — Surah Az-Zalzalah 99:6

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்

Verse 7 — Surah Az-Zalzalah 99:7

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்

Verse 8 — Surah Az-Zalzalah 99:8

அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்