Back to Languages

Tamil - Chapter 100 - Al-Adiyat

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Al-Adiyat 100:1

மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக

Verse 2 — Surah Al-Adiyat 100:2

பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்

Verse 3 — Surah Al-Adiyat 100:3

பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்

Verse 4 — Surah Al-Adiyat 100:4

மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்

Verse 5 — Surah Al-Adiyat 100:5

அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக

Verse 6 — Surah Al-Adiyat 100:6

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்

Verse 7 — Surah Al-Adiyat 100:7

அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்

Verse 8 — Surah Al-Adiyat 100:8

இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்

Verse 9 — Surah Al-Adiyat 100:9

அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது

Verse 10 — Surah Al-Adiyat 100:10

மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது

Verse 11 — Surah Al-Adiyat 100:11

நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்