Back to Languages

Tamil - Chapter 104 - Al-Humazah

Translation by Jan Turst Foundation — Permalink

Verse 1 — Surah Al-Humazah 104:1

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்

Verse 2 — Surah Al-Humazah 104:2

(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்

Verse 3 — Surah Al-Humazah 104:3

நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்

Verse 4 — Surah Al-Humazah 104:4

அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்

Verse 5 — Surah Al-Humazah 104:5

ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது

Verse 6 — Surah Al-Humazah 104:6

அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்

Verse 7 — Surah Al-Humazah 104:7

அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்

Verse 8 — Surah Al-Humazah 104:8

நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்

Verse 9 — Surah Al-Humazah 104:9

நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக)