Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 95 - At-Tin
Translation by Jan Turst Foundation — Permalink
Verse 1 — Surah At-Tin 95:1
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக
Verse 2 — Surah At-Tin 95:2
ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக
Verse 3 — Surah At-Tin 95:3
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக
Verse 4 — Surah At-Tin 95:4
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்
Verse 5 — Surah At-Tin 95:5
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்
Verse 6 — Surah At-Tin 95:6
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு
Verse 7 — Surah At-Tin 95:7
எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்
Verse 8 — Surah At-Tin 95:8
அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா