Back to LanguagesPrevious ChapterNext Chapter
Tamil - Chapter 88 - Al-Ghashiyah
Translation by Jan Turst Foundation — Permalink
Verse 1 — Surah Al-Ghashiyah 88:1
சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா
Verse 2 — Surah Al-Ghashiyah 88:2
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்
Verse 3 — Surah Al-Ghashiyah 88:3
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்
Verse 4 — Surah Al-Ghashiyah 88:4
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்
Verse 5 — Surah Al-Ghashiyah 88:5
கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்
Verse 6 — Surah Al-Ghashiyah 88:6
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை
Verse 7 — Surah Al-Ghashiyah 88:7
அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது
Verse 8 — Surah Al-Ghashiyah 88:8
அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்
Verse 9 — Surah Al-Ghashiyah 88:9
தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்
Verse 10 — Surah Al-Ghashiyah 88:10
உன்னதமான சுவர்க்கச் சோலையில்
Verse 11 — Surah Al-Ghashiyah 88:11
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை
Verse 12 — Surah Al-Ghashiyah 88:12
அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு
Verse 13 — Surah Al-Ghashiyah 88:13
அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு
Verse 14 — Surah Al-Ghashiyah 88:14
(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்
Verse 15 — Surah Al-Ghashiyah 88:15
மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்
Verse 16 — Surah Al-Ghashiyah 88:16
விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு
Verse 17 — Surah Al-Ghashiyah 88:17
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று
Verse 18 — Surah Al-Ghashiyah 88:18
மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்
Verse 19 — Surah Al-Ghashiyah 88:19
இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்
Verse 20 — Surah Al-Ghashiyah 88:20
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா)
Verse 21 — Surah Al-Ghashiyah 88:21
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்
Verse 22 — Surah Al-Ghashiyah 88:22
அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்
Verse 23 — Surah Al-Ghashiyah 88:23
ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ
Verse 24 — Surah Al-Ghashiyah 88:24
அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்
Verse 25 — Surah Al-Ghashiyah 88:25
நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது
Verse 26 — Surah Al-Ghashiyah 88:26
பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது